பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

675


"மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத்

தவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வாயுயிரும் இறையாட்ட ஆடலாற் கைவாயிலாநிறையெங்குமெய் கண்டதே (2586)

எனவரும் திருமந்திரத்தால் உய்த்துணரப்படும்.

இத்திருமந்திரப்பொருளை அடியொற்றியமைந்தது,

"பன்னிறங்காட்டும் படிகம்போல்இந்திரியம்

தன்னிறமே காட்டுந் தகைநினைந்து- பன்னிறத்துப் பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா

மெய்கண்டான் மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு”

- (சிவஞானபோதம் சூ. 8)

எனவரும் சிவஞான போதவெண்பாவாகும்.

உயிர்தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட புண்ணியத்தின் மிகுதியால் தனக்கு உயிர்க்குயிராய் இதுகாறும் உள்நின்றுணர்த்திய பரம்பொருளே இப்பொழுது குருவடிவமுங் கொண்டு எழுந்தருளிவந்து சிவதீக்கை செய்து “மன்னவ குமாரனாகிய நீ ஐம்பொறிகளாகிய,வேடர் சூழலில் அகப்பட்டு வளர்ந்து நின்பெருந்தகைமையறியாது மயங்கி இடர்ப்பட்டாய், நின் பெருந்தகைமையாவது இவ் வியல்பினது' என்று அறிவுறுப்ப அறிந்த அளவிலேயே அவ்வேடர் சூழலை விட்டு நீங்கி வேறுபாடின்றி ஒன்றாந் தன்மையின் நிலைபெற்று அம்முதல்வன் திருவடிகளை அணையும் என்று இறைவன் குருவாய் வந்தருளும் முறைமையினைக் கூறுவது,

“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட் டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே”

எனவரும் சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமாகும். உணர்த்த உணரும் இயல்பினையுடைய உயிர்கள் ஐம்பொறிகளால் மயக்கமுற்றுத் தமது இயல்பினை