பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அறியமாட்டா. படிகத்தின் வைத்த பல்வேறு வகைப்பட்ட நிறங்கள் அப்படிகவொளியைக் கீழ்ப்படுத்துத் தத்தம் இயல்பினையே விளக்கி நிற்குமாறு போல, அவ்வைம் பொறிகள் தாம் ஆன்ம சொரூபத்தைக் கீழ்ப்படுத்துத் தம்மாற் காட்டப்பட்ட விடயங்களின் அளவே அவ்வான்மாவுக்குக் காட்டி நிற்பனவாகலான் என ஏதுக்காட்டி நிறுவுவது, இவ்வெட்டாஞ்சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணமாகும். இந்திரியங்கள் அவ்வாறு தம்மாற் காட்டப்பட்ட விடயங் களையே காட்டி நிற்பனவாயின் இவ்விந்திரியங்கள் உள்ள போது இறைவன் குருவாய் வந்துணர்த்தினும் தன்னை யுணர்தல் இயலாதுபோலும் என ஐயுறுவாரை நோக்கித் தன்னையுணர்தற்கு உபாயம் கூறுவதாக அமைந்தது, "பன்னிறங் காட்டும் படிகம் போல்’ எனவரும் இவ்வுதாரன வெண்பாவாகும். "தன்னாற் சாரப்பட்ட பன்னிறங்களின் இயல்பே தன்பாற் காட்டி நிற்கும் பொதுவியல்புடைய படிகக்கல் போன்று, தன்னாற் சாரப்பட்ட இந்திரியங்களின் இயல்பையே சார்ந்ததன் வண்ணமாய்த் தன்மாட்டு விளக்கி நிற்கும் தனது பொதுவியல்பை முன்னர்ச் சிந்தித்தறிந்து கொண்டு பின்பு அந்நிறங்கள் படிகத்துக்கு வேறு என்று அறியுமாறுபோலப் பலவகையியல்புடைய பொதுவியல்பைச் செய்யும் ஐம்பொறிகளைத் தன்னின் வேறெனத் தெளிந்து அவற்றானாய.பொதுவியல்பு பொய்யாயொழியுமாறு தனது சிறப்பியல்பை யுணர்ந்தானாயின் அவ் அசத்தாகிய பொறிகளுக்கு வேறாகிய சிவசத்தினது இயல்பு தன்னிடத்து விளங்கச் செய்யுமாகலின் அச்சிவசத்துக்கு அடிமையாவன்” என்பது இவ்வுதாரணவெண்பாவின் பொருளாகும். இவ்வெண்பாவிலுள்ள மெய்கண்டான் என்ற தொடர் மேற்குறித்த திருமந்திரத்திலுள்ள எங்கும் மெய்கண்டதே' என்ற தொடர்ப்பொருளைத் தன்னகத்துக்கொண்டுள்ளமை &TGSGrayn't b.

தேவர் முதலிய யாவராலும் அறிய வொண்ணாத சிவபரம்பொருள் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து உயிர்களைப் பாசப்பிணிப்பினை அகற்றி மெய்யுணர்வு அளித்தருளும் என்பது சிவநெறிச் செல்வர்களது