பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அற்றுச் சிவபரம்பொருளோடு பிரிவற ஒன்றிநிற்கும் பெற்றியினை விளக்குவது,

“வித்தினிலன்றி முளையில்லை யம்முளை த்தினிலன்றி வெளிப்படு மாறில்லை வித்தும்முளையும் உடனன்றி வேறல்ல அத்தன்மைத்தாகும் அரநெறி காணுமே” (1932,3192)

எனவரும் திருமந்திரமாகும்.

விதையினுள்ளே முளையென்று ஒருமுதல் வெளிப் படாது ஒன்றாய் அடங்கியிருத்தல் போன்று சிவஞானம் பெற்ற ஆன்மாக்களும் தாம் என்றதொரு முதன்மைகெடச் சிவபரம் பொருளிடத்திலே பிரிவற அடங்கியிருப்பார்கள் என்பது இதன் பொருளாகும். இதன் பொருளை விளக்கும் நிலையிலமைந்தது.

“வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்

வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில் - வித்ததனிற் காணாமையாலதனைக் கைவிடுவர் கண்டவர்கள்

பேணாமையாலற்றார் பேறு”

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். "மெய்ப்பொரு ளாகிய இறைவன்து திருவருள் ஞானம் விதையும் அதனிடத்தே முளைத்தெழுந்த முளையும் போன்று முறையே காரணமாகிய சிவம் மறைந்தும் காரியமாகிய ஞானம் வெளிப்பட்டும் இருக்கும். காரணமாகிய விதை யினையும் அதன் காரியமாகிய முளையினையும் மெய்ம்மை யாக உணருமிடத்து அம்முளையிடத்தே விதை வெளிப்படத் தோன்றாமையால் அவ்விதையின் உண்மையினையுணராது அதனை நெகிழவிடுவர் ஒருசாரார். வெளிப்பட விரிந்த முளையுண்மையைக் கண்டவர்களும் திருவருளாகிய அதனைப் பேணிப் போற்றாமையால் அதனாற் பெறுதற்குரிய சிவப்பேற்றை இழந்தவர்களாவர்” என்பது இதன் பொருளாகும். வித்து விதை. அங்குரம் - முளை,

சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பினை விளக்குவது,