பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

679


“பதி பசு பாசம் எனப்பகர் மூன்றிற்

பதியினைப் போற் பசு பாசம் அனாதி பதியினைச் சென்றனுகாப்பசுபாசம் பதியணுகிற் பசுபாசம் நிலாவே' (115)

எனவரும் திருமந்திரமாகும். "இறைவன், உயிர், தளை எனச் சொல்லப்படும் முப்பொருள்களுள் பதியாகிய இறையைப் போலவே உயிரும் தளையும் தோற்றமில் காலமாக உள்ள பொருள்களே. எனினும் பதியாகிய இறையைப் பசுவும் பாசமும் சென்று பற்றவல்லன அல்ல. பதியாகிய இறைவன் (உயிர்கள்மேல் வைத்த கருணையால்) அணுகுவானாயின் உயிரினிடத்துப் பசுத்துவமும் ஏனைப் பாசமும் நில்லாது நீங்குவனவாம்” என்பது இதன்பொருள்.

பதி - இறைவன். பசு - பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள உயிர். பாசம் என்பன உயிரின் அறிவை அனாதியே மறைத்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்னும் மூவகைப் பிணிப்புக்கள். அனாதி - இன்னகாலத்தில் தோன்றின எனத் தோற்றம் சொல்ல முடியாத காலம். பசு அறிவாகிய குறையுணர்வினாலும் பாச அறிவினாலும் தொடர வொண்ணாது அப்பாற்பட்டு விளக்குவதே பரம்பொருள் என்பது அறிவுறுத்துவார், பசு பாசம் பதியினைச் சென்று அனுகா என்றார். இத்தொடரின் பொருளையே சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரத்து ஊனக்கண் பாசம் உனராப் பதியை’ என்ற தொடரால் மெய்கண்டார் எடுத்தாண்டுள்ளார்.

இத்திருமந்திரப் பொருளைச் சிந்தித்து உணரும் முறையில் திருவதிகை மனவாசகம் கடந்தார் தம் ஆசிரியர் மெய்கண்ட தேவரை நோக்கி வினவும் முறையில் அமைந்தது,

"வாக்கு மனமிறந்த வான்கருணை யாளனுருத்

தாக்கறவே நிற்குந் தனிமுதல்வா - நீக்காப் பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய் கதியிடத்து மூன்றினையுங் காட்டு” (உண்மை.49)

எனவரும் உண்மை விளக்கமாகும்.