பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“மனவாக்குக்களுக்கு எட்டாத அருளே வடிவாய் உலகத்திலே தோய்வற்று நிற்கும் ஒப்பற்ற தலைவனே, விட்டு நீங்காமல் இருக்கும் பதிப்பொருளைப்போல் பசுவும் பாசமும் நித்தியப்பொருள்களே என்று அருளிச் செய்தாய். முத்தியிலும் அம் மூன்று பொருள்களும் அழியாமல் நிற்கிற முறைமையை அடியேனுக்குக் காட்டியருள்வாயாக’ என்ப து. இதன்பொருளாகும். இதன் கண் வாக்கு மனமிறந்த வான்கருணையாளன், உருத்தாக்கறவே நிற்குந் தனிமுதல்வா என்பது, பசு பாசம் பதியினைச் சென்று அனுகா என்ற இத் திருமந்திரத் தொடரையும், ‘பதியினைப்போல் நித்தம் பசுபாசம் என்றாய் என்பது பதிபசுபாசம் எனப் பகர் மூன்றிற் பதியினைப்போல் பசுபாசம் அனாதி என்ற தொடரையும் அடியொற்றியமைந்த விளக்கமாகும்.

ஆன்மா துலவுடம்பினை விட்டு நீங்கிச் செல்லு தற்குப் பாம்பு தன் சட்டையைக் கழற்றிப் புதியதொரு தோல் போர்த்துச் செல்லுதலும், புருடன் நனவுடம்பின் நீங்கிக் கனவுடம்பிற் செல்லுதலும், யோகிகள் தம் உடம்பு நீங்கி வேறோருடம்பிற் செல்லுதலும் உவமையாகும். இவ் வுண்மைகள்,

“நாகமுடலுரிபோலும் நல்லண்டச

மாகநனாவிற் கனாமறந்தல்லது போகலுமாகும் அரனருளாலேசென் றேகுமிடஞ் சென்றிருபயனுண்ணுமே” (2132)

கிே - - - - -

உண்டு நரக சுவர்க்கத்தி லுள்ளன

கண்டு விடுஞ்சூக்கம் காரணமாச்செலப் பண்டு தொடரப்பரகாய யோகிபோற் பிண்ட மெடுக்கும் பிறப்பிறப்பெய்தியே” (2133)

எனவரும் திருமந்திரப்பாடல்களில் இடம்பெற்றுள்ளமை SfTGESTER)sTib.

குடம் உடைந்தவிடத்துக் குடஆகாயம் ஆகாயத் தொடு கூடுதல் என்றது, உயிர் சூக்குமவுடம்பை விட்டுச் செல்லுதற்கு உவமையாகும். இவ்வுவமைகளின் வேறு பாட்டினைப் புலப்படுத்தி உயிர் துலம் சூக்குமம் ஆகிய