பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்னறிவ தென்றும் உரைத்துநீநிற்றிகாண் என்னிலவை வேறாம் உணர்”

(சிவஞானபோதம் சூ. 3 அதி. 2)

எனவரும் வெண்பாவாகும். "அறிவு விளக்கம் பெறாத காலத்துப் பதி (ஊர்) மனைவி முதலிய புறப்பொருள்களைத் தனித்தனியே எனது எனது எனத் தற்கிழமைப் பொருள்க ளாகக் கூறிக்கொண்டு நின்றாற்போல, உனது அல்லாத உன்கை கால் உடம்புகளைத் தனித்தனியே எனது என்றும் அங்ங்ணம் அறிந்த பாச அறிவினை என் அறிவு அது என்றும் தற்கிழமைப் பொருளாகக் கூறிக்கொண்டு நின்றாற்போல, நீ ஆன்மாவாகிய ஒரு பொருளாக வேறு நிற்கின்றாய். ஆராய்ந்து பார்ப்பாயாயின் அக் கை கால் முதலியன உயிராகிய உனக்கு வேறாவன என்று உணர்வாயாக’ என்பது இதன் பொருளாகும். எனது உடல் என்றலின் ஆன்மா வுளது என்னும் சிவஞானபோதம் மூன்றாஞ்சூத்திரம் இரண்டாம் அதிகரணத்திற்குரிய இவ்வெண்பா மேற்குறித்த திருமந்திரத்தொடர்ப் பொருளை இனிது விளக்கி நிற்றல் ć%TTçößTGöTTÍÍ).

பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் அறியப்படுவ தாய் ஒருநிலையில் நில்லாது அழிந்து மாறுந்தன்மையதாகிய பிரபஞ்சத்தை அசத்து எனவும், அழிவின்றி என்றும் உள்ளதாய்ப் பதிஞானம் ஒன்றினாலேயே அறியப்படும் முழுமுதற் கடவுளைச் சத்து எனவும் சிவசத்து எனவும், சத்தினைச் சார்ந்த நிலையிற் சத்தாகவும் அசத்தினைச் சார்ந்த நிலையில் அசத்தாகவும் நின்று சத்தும் அசத்துமாகிய அவ்விரு திறப்பொருள்களையும் அறியுந் தன்மைத்தாகிய ஆன்மாவைச் சதசத்து எனவும், அறிவேயுருவாகிய பரம் பொருளைச் சித்து எனவும் அறிவிலதாகிய பாசத்தை அசித்து எனவும் குறியிட்டு வழங்குதல் சைவசித்தாந்த நூன் மரபாகும்.

"சத்தும் அசத்துஞ்சதசத்துந் தான்கண்டு

சித்தும் அசித்துஞ் சேர்வுறாமே நீத்த சுத்தம் அசத்தமும் தோய்வுறாமே நின்று நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே (1420)