பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

685


“தானே அறியான், அறிவிலோன்தானல்லன், தானே அறிவான் அறிவுசத்து அசத்து என்று ஆனால், இரண்டும் அரனருளாய் நிற்கத் தானே யறிந்து சிவத்துடன் தங்குமே” (2329)

என வரும் திருமந்திரமாகும். இதன்கண் தான் என்றது ஆன்மாவை. உயிரிலக்கணம் உயர்த்துவதாகிய இத் திருமந்திரப் பொருளை அடியொற்றியமைந்தது,

“யாவையுஞ் சூனியம் சத்தெதிராகலிற்

சத்தே அறியாது, அசத்துஇலது அறியாது இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா”

எனவரும் சிவஞானபோத ஏழாஞ்சூத்திரமாகும். "மாற்றம் மனங்கடந்த சிவத்தின் முன்னிலையில் உணருருவாகிய அசத்துப் பொருள்கள் யாவும் இப்பொருள் போற்பாழாம் ஆதலின் சத்தாகிய சிவம் அசத்தாகிய பிரபஞ்சத்தை அறிந்து நுகராது; அசத்துப் பொருளாகிய பிரபஞ்சம் அறிவில்லாத சடமாகலின் சிவத்தை அறிதல் செய்யாது. ஆதலால் (சொல்லொதொழிந்ததனால் உணரப்படுவதாகிய) பாரிசேட அளவையால் இருதிறனறிவுளது உண்டென்பது பெறப் படுதலின் அதுவே சத்தாதற்றன்மையும் அசத்தாதற் றன்மையும் ஆகிய இரண்டுமின்றிச் சதசத்தாயுள்ள உயிராகும்” என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். “இரண்டலா ஆன்மா இருதிறன் அறிவுளது என்றது, சத்தெதிர்நில்லாத அசத்தும் சத்தும் தம்முள் ஒன்றாய் நின்று அறியப்படாமையான் இருதிறனறிவுளது இரண்டலா ஆன்மாவேயாம், தம்முள் ஒன்றானொன்று அநுபவிக்கப் படாத ஞாயிற்றையும் விடயத்தையும் அநுபவிக்கும் கண்போலும் என அநுமானங்கூறிக் காண்க” என விளக்குவர் சிவஞானமுனிவர்.

“ஆன்மாவாகிய தான் என்றும் முதல்வனாகிய அவன் என்றும் சித்துப்பொருள். இரண்டென்பர் அறிஞர். தான் என்றும் அவனென்றும் பிரித்துனராதவாறு உயிரோடு முதல்வனுக்குள்ள அத்துவிதத்தொடர்பினையெண்ணித் தான் அவன் எனச் சிந்தித்துனரமாட்டார் கேவலநிலையில்