பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

689


ஆன்மா, சிவனுக்கு உடைமையாதலை அஞ் செழுத்து உச்சரிக்கும் முறையில் வைத்து நோக்கித் தன் உடம்பினுள்ளே இதயம் பூசைத்தானமாகவும், உந்தி ஒமத் தானமாகவும் புருவநடு தியானத்தானமாகவும் கொண்டு புறம்பே பூசை செய்யும் முறைப்படி உள்ளத்தாமரையில் திருவைந்தெழுத்தாகிய திருமேனியில் அம்முதல்வனைத் தியானித்து, கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்வகை மலர்களால் அருச்சித்து, அத்திருமந்திரத்தினாலே, குண்டலித்தானமாகிய உந்தியிலே ஞான அனலையெழுப்பி, அதன் கண் விந்துத்தானத்து அமிழ்தமாகிய நெய்யைச் சுழுமுனைநாடி இடைநாடியாகிய சுருக்குசுருவங்களால் சொரிந்து ஒமஞ்செய்து, விந்துத் தானமாகிய புருவநடுவிலே சிகாரயகார வகாரங்கள் மூன்றும் முறையே அதுவெனும் (தற்பதப்) பொருளும், நீயெனும் (துவம்பதப்) பொருளும், ஆகின்றாய் எனும் (அசிபதப்) பொருளும் ஆம்முறைநோக்கி அதனால் சிவோகம் பாவனை செய்வானாயின் அப் பாவனைக்கண் முதல்வன் விளங்கித் தோன்றுவன். அங்ங்ணம் பாவிப்பவன் ஆண்டான் அடிமைத்திறத்தால் இறைவனும் அடிமையானவன். இவ்வுண்மையினை அறிவுறுத்துவது,

“அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை

அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தால்

குண்டலியிற் செய்தோமம் கோதண்டஞ் சானிக்கில்

அண்டனாம் சேடனாம் அங்கு”

(சிவஞானபோதம், வெண்பா 59)

எனவரும் பாடலாகும். இறைவனைத் திருவைந்தெழுத்தின் துணையால் புருவத்தின் இடைவெளியாகிய விந்துத் தானத்திற் கண்டு வழிபடும் இம்முறை,

"நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி - உற்றுற்றுப் பார்க்க வொளிவிடுமந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமனிருந்திடம் சிற்றம்பலமென்று சேர்ந்து கொண்டேனே' (2770)

என முன்னர்க் காட்டிய திருமந்திரப் பாடலில் விளக்கப்

சை, சி. சா. வ. 44