பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

693


கெடவே ஆன்மாவாகிய குனியும் கெடும் எனப்பட்டு அங்கு இருபொருள் ஒன்றாய்க் கூடியதென்றல் இயலாது. ஏகதேச அறிவு கெடாது கூடுமென்றால், ஏகதேச அறிவுகெடாத வழி வியாபகப் பொருள் விளங்குதலின்மையால் அவ்விரண்டும் ஒன்றாகக் கூடுமாறில்லை. மற்று எவ்வாறு கூடுமெனின், ஏகதேச அறிவினைச் செய்யும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் மட்டும் கெட்டொழியத் தண்ணீரைச் சேர்ந்த உப்புப்போல ஆன்மா இறைவன் திருவடியைத் தலைப்பட்டு இறைவனுக்கு அடிமையாம். அந்நிலையில் இறைவனது திருவடி உயிரைத் தன்து வியாபகத்துள் அடக்கிக் கொள்ளும் என அறிவுறுத்துவார், 'உப்பெனப் ப்ேர்பெற்றுருச் செய்த அவ்வுரு, அப்பினிற் கூடிய தொன்றாகு மாறு போல், செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே என அருளிச் செய்தார் திருமூலநாயனார்.

இத்திருமந்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது,

§§

நசித்தொன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா நசித்திலதேல் ஒன்றாவதில்லை - நசித்துமலம் அப்பணைந்த உப்பின் உளமணைந்து சேடமாம் கப்பின்றாம் ஈசன் கழல்” (சிவ. 11 அதி. 2)

எனவரும் சிவஞான போத உதாரணவெண்பாவாகும்.

“அரன் கழல் செல்லுங்கால் ஆன்மா சகசமலங் கெட்டு ஒன்றுமோ கெடாதொன்றுமோ என வினவி னார்க்குக் கெட்டு ஒன்றும் என்றால் ஆன்மாவும் கெடு மாதலால் அவ்விடத்து ஒன்றமாட்டாது. சக சமலங் கெடாதாயின் ஆன்மாவும் சிவமும் இருபொருளாய் ஒன்றாமாறு இல்லை. ஆதலால் அருத்தாபத்தியளவையால் உப்பு தனது கடினத் தன்மை நீங்கி நீரின் ஒன்றாமாறுபோல ஆன்மாவும் தனது சகசமலம் கெட்டொழிய அரன்கழலை யொன்றி அதற்கு அடிமையாம். அங்ங்ணம் அடிமைத் திறத்தால் ஒன்றாகிய ஆன்மாவுக்கு மீளப்பிரிதல் இல்லை” என்பது இதன்பொருளாகும்.

தன் கண்னதாகிய கடின குனம் நீங்கி நீரினைச்'