பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

695


எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும்.

திருமூலநாயனார் திருமந்திரம் திருக்கூத்துத் தரிசனப் பகுதியில்,

“தேவர்கள் தானவர் சித்தர்வித்தியாதரர்

மூவர்களாதி முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயஞ் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே” (2731)

“தத்துவ மாடச் சதாசிவந்தானாடச்

சித்தமு மாடச் சிவத்தி தானாட வைத்த் சராசரமாட மறையாட

அத்தனு மாடினான் ஆனந்தக் கூத்தே (2789)

எனவரும் திருப்பாடல்களில் இறைவன் திருவருளால் தாம்கண்டு மகிழ்ந்த ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினைக் குறித்துள்ளமை காணலாம். இத்திருமந்திரப் பாடல்களை அடியொற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்தது,

$g

ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி

அருண்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர்

சூடாமணியாய் வையம்போற்றும் سألتكاملة பாதிமதியணி பவளச் சடைகள் தாழப்

படரொளியம் பலத்தாடும் பரனார் பாதத் தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத்

தளராத பேரன்பு வளர நிற்பாம்”

(சித்தியார், பரபக்கம் 1)

எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். "திருவம்பலத்து நிருத்தம் பண்ணுகையாவது, பூமிக்குச் சுழுமுனை நாடி சிதம்பரம் ஆதலால் அதில் ஆடுகை. அஜபாஸ்வர இபமாம் இரண்டக்கரமாகிய திருவடிகளால் ஆடுவதனால் உலகத்திற்கு உயிருமாய் நிற்பன் என்பது கருத்து. உயிர்களுக்குப் பலமாயிருப்பன் என்பது அஷ்ட மூர்த்தி வடிவாதலால். ‘தானாடத் தசையாடும் என்னும் பழ வார்த்தையும் இதனை நோக்கி எனக் கொள்க’ என