பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


விளக்கங்கூறுவர் சிவாக்கிரயோகியார்.

இறைவன் புறத்தே திருக்கோயிலுள் இருக்குந் திருமேனியும், நேயமலிந்த அடியார்களாகிய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரை இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளார் செய்யும் பூசையினை ஏற்றருள்கின்றான் என்பது,

'தாபரத் துண்ணின் றருளவல் லான்சிவன்

மாபரத் துண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்குப் பூவகத் துண்ணின்ற பொற்கொடி யாமே” (1717)

"படமாடக் கோயிற் பகவற்கொன் lயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன் lயில் படமாடக் கோயிற் பகவற்க தாமே” (1857)

எனவரும் திருமந்திரப் பாடல்களால் அறியலாம். இவறறை அடியொற்றி யமைந்தது,

"தாவர சங்கமங்கள் என்றிரண்டுருவில் நின்று

மாபரன் பூசைகொண்டு மன்னுயிர்க் கருணைவைப்பன்”

(118)

எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.

ஆன்மா அரசும் அமைச்சரும் போல அந்தக்கரணம் முதலிய மாயா கருவிகளைப் பற்றி உடன் நின்று அறியுங்கால் அரசன் போல் அவற்றுள் பலவற்றை விட்டுவிட்டுச் சென்று ஐவகை அவத்தைகளை (உணர்வுநிலைகளை) அடைவ தாகும். அந்நிலையில் நனவு நிலையாகிய சாக்கிரத்தில் நுதல் இடமாக முப்பந்தைந்து கருவிகளும், கனவுநிலையில் கண்டம் இடமாக இருபத்தைந்து கருவிகளும், உறக்க நிலையில் நெஞ்சம் இடமாக மூன்று கருவிகளும், பேருறக்க நிலையில் கொப்பூழ் இடமாக இரண்டு கருவிகளும், துரியாதீதம் எனப்படும் உயிர்ப்படக்க நிலையில் மூலம் இடமாக ஒருகருவியும் நிற்கும் என்பர். உயிர் கருவிகளோடு