தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .
697
கூடி அறியும் நிலையில் உள்ள உணர்வு நிலைகளாகிய ஐந்து அவத்தைகளிலும் தொழிற்படுங் கருவிகளை
"முப்பதோ டைந்தாய் முதல்விட்டங்கையைந்தாய் செப்பதின் மூன்றாய்த் திகழ்ந்திரண் டொன்றதாய் இப்பதிநின்ற இயல்பை யறிந்தவர் அப்பதி நின்றமை ஆய்ந்துகொள் ளீரே” (2143)
என வரும் திருமந்திரத்தில் திருமூலர் தொகைப்படுத்திக் கூறியுள்ளார். இத்திருமந்திரப்பாடலை அடியொற்றி யமைந்தது
“ஒன்றணையா மூலத் துயிரணையும் நாபியினில்
சென்றணையும் சித்தம் இதயத்து - மன்றவே ஐயைந்தாம் நன்னுதலிற் கண்டத்தின் வாக்காதி மெய்யாதி விட்டகன்று வேறு” (வெண்பா 28)
எனவரும் சிவஞான போத உதாரண வெண்பாவாகும்.
‘சாக்கிரத்தானம் எனப்படும் நெற்றியிலே ஞானேந்திரியம் கன்மேந்திரியம் எனப்படும் புற இந்திரியங்கள் பத்துடன் பொருந்திய இருபத்தைந்து கருவிகள் தொழிற்படும். சொப்பனத்தானம் எனப்படும் கண்டத்தில் மேற்கூறிய புறஇந்திரியம் பத்தும் நீங்கலாக இருபத்தைந்து கருவிகள் தொழிற்படும். சுழுத்தித் தானமாகிய இதயத்தின் கண்ணே முற்கூறியவற்றுள் இருபத்திரண்டு கருவிகளை விட்டு நீங்கி, சித்தம், புருட தத்துவம், பிராணவாயு ஆகிய மூன்று கருவிகள் தொழிற் படும். துரியத்தானமெனப்படும் உந்தியிலே புருடதத்துவத் தோடு பிராணவாயு என்னும் இரண்டுமே தொழிற்படும். இக்கருவிகள் ஒன்றும் அணையாத அதீதத் தானமெனப் படும் மூலாதாரத்திலே புருடன் ஒன்றுமே தொழிற்படும்.
தாம்கூடியும் குறைந்தும் வருதலால் ஆன்மா ஐவகை அவத்தையுறுதற்குக் காரணமாகிய முப்பத்தைந்து கருவிகளாவன. ஞானேந்திரியம் கன்மேந்திரியம் ஆகிய புற இந்திரியம் பத்தும், அவற்றிற்குரிய விடயங்கள் பத்தும், அவற்றினுக்கு உட்கருவியாகிய அந்தக் கரணங்கள் நான்கும்,