பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

703


அதுபோலவே இறைவன் எழுந்தருளிய திக்கோயில்களைக் கட்டி முடித்தலும் இம்மை மறுமைகளிற் பெரும்பயன் விளைக்கும் சிறப்புடைய அறமாகக் கருதப்பட்டு வருகின்றது. இங்குக் குறிக்கப்பட்ட பேரறங்கள் எல்லாவற்றையும் விட மக்களது மனவிருளைப் போக்கித் தமது ஞானமெய்ந்நெறி யால் உலகிற்கு நற்பயன் விளைக்கும் சிவஞானிகட்கு ஒரு பகல் ஒருவேளையுணவளித்தலால் வரும் பயனுக்கு மேற்குறித்தவை யாவும் சிறிதும் ஒப்பாகமாட்டா என வற்புறுத்தும் நிலையில் அமைந்தது,

"அகரம் ஆயிரம் அந்தணர்க்கீயிலென் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலுண் பலத்துக்கு நிகரில்லையென்பது நிச்சயந் தானே’ (1860)

எனவரும் திருமூலர் திருமந்திரமாகும்.

"அந்தணர் குடியருப்பூர்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அந்தணர்க்கீவதால் வரும் பயன்யாது? திருக் கோயில்கள் ஆயிரக்கணக்கினவாகக் கட்டி முடித்தலால் உளதாம் பயன் யாது? யாவரும் புகழ்ந்தேத்தும் சிவஞானி யாகிய அடியார் ஒருவர் ஒரு பகற்பொழுது உண்ண உணவளித்தலால் வரும் பயனுக்கு மேற்குறித்த அறப்பயன்கள் சிறிதும் ஒவ்வா என்பது உறுதி” என்பது இதன் பொருளாகும். இங்ங்னம் சிவஞானிகட்கு ஒன்றனையீதலால் வரும் பயனை அறிவுறுத்துவதாக அமைந்தது,

"சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்

திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து

பவமாயக் கடலினழுந்தாதவகை யெடுத்துப்

பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தையறுக்கத்

தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்

சரியைகிரி யாயோகம் தன்னினும் சாராமே

நவமாரும் தத்துவஞானத்தை நல்கி

நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே’ (278)

எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும்.