பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இதன்கண் ஒடுங்கி என்றது. உலகுயிர்களெல்லாம் ஒடுங்குதற்குக் காரணமாகிய சங்காரக் கடவுளை, சிவஞானபோதம் முதற்குத்திரத்தில் அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றியதிதியே, ஒடுங்கி மலத்துளதாம்’ எனச் சங்கார காரனனாகிய இறைவனை ஒடுங்கி என்ற பெயராற் குறித்தார் மெய்கண்டார். ஒடுங்கி மலத்துளதாம்’ என்ற தொடர்க்கு 'ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை என அவர்தாமே உரை வரைந்திருப்பதால் 'ஒடுங்கி என்பதனை எல்லாப்பொருள்களும் தன்கண் ஒடுங்குதற்கு நிலைக்கள மானவன் என்ற பொருளில் சிவபெருமானைக் குறித்த பெயராகவே ஆண்டுள்ளார் என்பது நன்கு தெளியப்படும். இச்சூத்திரத்து அந்தம் ஆதி என்மனார் புலவர் என அவர் கூறுமாறு சங்கார காரணனாகிய சிவபெருமானே உலகினை மீளவும் தோற்றுவிப்பவன் என்பது,

"தொல்லு Nதடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற்

பல்வயினுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்

போல்”

எனவரும் கலித்தொகைத் தொடர் கொண்டு முன்னர் வலியுறுத்தப்பட்டது. எனவே இறைவனைக் குறித்ததென மெய்கண்டார் சுட்டிய பெயர், ஒடுங்கிநிலை பெற்ற உத்தமர் உள்ளம் என வரும் இத்திருமந்திரத்தில் முன்னரே இடம் பெற்றுள்ளண்ம இங்கு ஒப்பு நோக்கியுனரத்தகுவதாகும். 'ஒடுங்கி நிலைபெற்ற என்பதற்கு ஒடுங்கியாகிய இறைவ னிடத்தே ஒன்றி நிலைபெற்ற எனப் பொருள் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

“அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்

சென்றிடும் ஞானச் சிவப்பிரகாசத்தால் ஒன்று மிருசுடராமருணோதயந் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே” (2001)

எனவரும் திருமந்திரப் பொருளை உளங்கொண்ட உமாபதி சிவாசாரியார் குருமுதல்வராகிய மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்தையும் அதன்வழி நூலாகிய அவர்தம்