பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

காரைக்காலம்மையார்

திருவருள் ஞானம் பெற்றவர் காரைக்காலம்மையார் "திருவருள் ஞானமாவது முதலிகள் மூவர் (தேவார ஆசிரியர் மூவர்) காரைக்காலம்மை முதலாயினோர்க்குண்டாகிய ஞானமென அறிக” என மதுரைச் சிவப்பிரகாசர் கூறுதலால் இவ்வுண்மை நன்கு தெளியப்படும். காரைக்காலம்மையார் இறைவனருளாற் பெற்ற திருவருள் ஞானத்தின் பயனாகத் திகழ்வன அவர் அருளிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் திருவிரட்டை மணிமாலையும் அற்புதத் திருவந்தாதியும் ஆகிய திருவருட்பனுவல்களாகும். அவற்றுள் அற்புதத் திருவந்தாதி யென்பது இறைவனருளால் தம் உள்ளத்துத் தோன்றிய சிவஞானத்தின் ஒருமைப்பாட்டினால் உமை யொரு கூறனாகிய இறைவனைப் பாடிப்போற்றியதாதலின் அப்பெயர்த்தாயிற்று அற்புதம் - ஞானம். இந்நூல் ஒதுதற்கு இனிமையு. எளிமையும் உடையதாய் உணர்தற்கு அரிய சிவஞானத்து இயல்பினைத் தெளிவுபடுத்துவதாகும்.

காணப்படும் உலகம் காண்டற்கரிய கடவுளாகிய ஒருவனால் தோற்றுவிக்கப்பெற்ற உள்பொருளே என்பதும், 'யாது யாண்டு ஒடுங்கும் அஃது அதனில் உற்பத்தியாம், மண்ணிற் குடம்போலும் என்னும் விட்டு நீங்காமை இயல்பினால் உலகினை ஒடுக்கிய இறைவனே உலகத்தை மீளத்தோற்றுவிப்பவனும் ஆவன் என்பதும் சைவசித்தாந்தக் கொள்னையாகும். இக்கொள்கை

“இறைவனே எவ்வுயிருந்தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே யீண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே எந்தாய் எனவிரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அது மாற்றுவான்” (அற்புதத்.5)