பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

711


எனவரும் அற்புதத்திருவந்தாதியில் இடம் பெற்றுள்ளமை காணலாம். “எப்பொருளிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால்) இறைவன் என்னும் காரணப் பெயருடைய கடவுளே மன்னுயிர்களுக்கு உடல் கருவி உலகு நுகர்பொருள்களைப் படைத்தளிப்பவன், அவற்றை மீண்டும் ஒடுக்குதலைச் செய்பவனும் அவ்விறைவனே. எம் தந்தையே எனப் போற்றி வழிபடும் உயிர்களாகிய எங்கள் மேல் பொறுத்தற்கரிய துன்பங்கள் வந்து வருத்துமாயின் அவற்றைப் போக்கி இவ்வுலகில் வாழச் செய்பவனும் அவ்விறைவனே என்பது மேற்காட்டிய திருப்பாடலின் பொருளாகும்.

ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் நம்மால் அணுகமுடியாத பரவெளியிலுள்ளான் என்று சொல்லுவார் சொல்லுக. மேலும் தேவருலகத்துள்ளான் என்று சொல்லுவார் சொல்லுக. அப்பெருமான் எனது நெஞ்ச மாகிய அணி இடத்தில் இருந்து அன்பர்கட்கு அருள் புரிகின்றான் என யான் உறுதியாகச் சொல்கின்றேன் என்பார்,

&# - - & - - • * -

வானத்தா னென்பாரும் என்கமற்றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க- ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத் தானென்பன் யான்” (அற்புதத் 6)

என்று அருளிச் செய்தார் காரைக்காலம்மையார். இதனால் இறைவன் உயிர்தோறும் உயிர்க்குயிராய்க் கலந்துள்ள திறம் நன்கு புலப்படுத்தப் பெற்றமை காணலாம்.

உலகமெல்லாவற்றையும் ஆள்விப்பதும் உயிர்களின் பிறவி நோயைப் பொன்றக் கெடுப்பதும் ஈசனது திருவருளே யாகும். அத்திருவருளின் துணைகொண்டே மெய்ப்பொரு ளாகிய சிவபரம்பொருளைக் கண்டு வழிபடும் நற்பேறுடைய னாயினேன். அடியேனுக்கு எக்காலத்தும். எல்லாப் பொரு ளாகவும் நின்று துணைபுரிவது அத்திருவருளேயாகும் என்பார்,

“அருளே யுலகெலாம் ஆள்விப்பதீசன்

அருளே பிறப்புறுப்ப தானால் அருளாலே