பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

713


"அறிவானுந் தானே அறிவிப்பான் தானே

அறிவாயறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந்தானே யவன்” (அற்புதத் 20)

எனவரும் அற்புதத் திருவந்தாதியாகும்.

உயிரின் தூண்டுதலின்றித் தொழிற்படாத கண் ஒருருவத்தைக் காணுங்கால் உயிரினது உணர்வு எனவும் கண்னொளியெனவும் பிரித்துனரவாராது இரண்டன் காட்சியும் ஒன்றனையொன்றுவிடாது அத்துவிதமாய் ஒருங்கே நிகழுமாறு போல, முதல்வனது காட்டும் உதவியின்றி ஒன்றையும் தானே கானமாட்டாத உயிர், ஒருபொருள்ை அறியுங்காலும் முதல்வனது பேரறிவு உயிரறிவு எனப் பிரித்துனரவாராது வேறன்றி உடனாய்க் கலந்துநிற்ப முதல்வனும் அவ்வாறு உயிரோடு கலந்து நின்று உயிருக்குத் தான் அறிவித்ததொன்றனை அவ்வுயிர் அறிந்ததென்றும் அதனைச் செலுத்திநின்று தான் அறிந்ததென்றும் பகுத்தறிய வாராது இருவகையறிவும் ஒருங்கேநிகழுமாறு உயிர்கட்குச் செய்துவரும் இவ்வுதவியினைக் காணும் உபகாரம் என்பர் சைவ சித்தாந்திகள். இறைவன் உயிர்கட்குச் செய்யும் இவ்வுபகாரம் உயிர்களது பெத்தநிலையிலும் (கட்டு நிலையிலும்), வீட்டு நிலையிலும் (முத்தி நிலையிலும்) ஒருபெற்றித்தாய் நிகழுமாறு செய்யும் அத்துவித நிலையினை இத்திருவந்தாதி இனிது புலப்படுத்தல் அறியத்தகுவதாகும். ‘அவையேதானேயாய் (சிவ.சூ. 2) என மெய்கண்டாரும், 'உலகெலாமாகி வேறாய் உடனுமாய் (சித்தியார்) என அருணந்தி சிவாசாரியாரும் கூறிய அத்துவிதவியல்பு இத் திருவந்தாதியில் இடம் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

"அத்துவிதமாவது, பேதப்பொருள் இரண்டும் தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்த விசேடம்.உயிர் ஒன்றனையறிதல் முதல்வன் உடனின்றறிதலையின்றி அறிவித்தல் மாத்திரையான் அமையாதென்பது, 'தொண்ட னேன் நினையுமா நினையே விரும்புமா விரும்பே' (திருவிசைப்பா) ........... இவ்வாறு முத்திநிலைபற்றியோதிய