பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருவாக்குக்களாலும் அறிக. இவ்வியல்பு நோக்கியன்றே 'அறிவானுந்தானே அறிவிப்பான்தானே' என்றோ திய அம்மை, அறிவாய் அறிகின்றான் தானே எனவும் ஒதியது.உம் என்க. முன் 'அறிதல் அறிவித்தற்பொருட்டு எனவும், பின் அறிவாயறிதல் விடயத்தில் அழுந்துவித்தற் பொருட்டு எனவும் கொள்க’ (சிவஞானபோதச் சிற்றுரை, சூ. 11) எனச் சிவஞான முனிவர் இத்திருப்பாடலுக்குக் கூறிய விளக்கம் ஆழ்ந் துணரத்தகுவதாகும்.

"அவனே யிருசுடர் தீயாகாசமாவான்

அவனே புவிபுனல் காற்றாவான் - அவனே இயமானனாய் அட்டமூர்த்தியுமாய் ஞான மயனாகிநின்றானும் வந்து" (21)

எனவரும் இப்பாடல் முன்னர்க் கூறியபடி இறைவன் உலகெலாமாகி வேறாய் உடனுமாய் நிற்கும் முறைமையினை விரித்துரைப்பதாகும். (முன்னைத் திருப்பாடலிற் கூறிய இயல்பினனாகிய) அவ்விறைவனே ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்களாகவும் தீயாகவும் ஆகாயமாகவும் விளங்குபவன். அவனே நிலம், நீர், காற்று என்னும் இவையாவும் நிற்பவன். ஆன்மாவாகியும் (இரு சுடர் முதல் உயிர் ஈறாக எண்ணப்பட்ட) எண் பேருருவினனாகியும் ஞானமே திருமேனியா த் திகழ்பவனாகி (அன்பர்க்கு) எளிவந்து அருள் செய்து நிற்பவனும் அவ்விறைவனே யாவன்” என்பது இதன் பொருளாகும்.

இயமானன் - வேள்வித்தலைவன், என்றது ஆன்மாவை. ஞானமேயாகிய தனது உண்மைத் திருமேனியே யன்றி உலகப் பொருள்கள் எல்லாவற்றோடும் அத்துவித மாய்க் கலந்து நிற்றலால் இருசுடர் முதலாகவுள்ள இவற்றையும் தனக்குரிய திருமேனியாகக் கொண்டுள்ளான் என்பது கருத்தாகலின் அட்டமூர்த்தியுமாய்' என்புழி உம்மை எச்சப் பொருளதாய் நின்றது. “ஞானமயனாகி வந்து நின்றானும் அவனே என இயைத்துரைக்க.

கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிலவிய அருளாசிரியர்கள் திருமூலநாயனார், காரைக்காலம்மையார்