பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

719


சமயங்களிடையே காணப்படும் கொள்கை வேறுபாடுகளைக் கருதாமல் எவ்வுயிர்க்கும் இறைவன் ஒருவனே என்றுந் தெளிந்து வழிபடுதலொன்றே உலகமக்கள் உய்தி பெறுதற்குரிய நன்னெறியாகும் என்பது சைவசமய அருளாசிரியர்களின் துணியாகும்.

3

“எத்தவத்தோர்க்கும் இலக்காய்நின்ற எம்பெருமான் o (1-44-10)

“எங்கேனும் யாதாகிப்பிறந்திடினுந் தன்னடியார்க்

கிங்கேயென்றருள் புரியும் எம்பெருமான்” (2-40-6)

என ஆளுடையபிள்ளையாரும்,

“விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ்செய்தே எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கேற்றதாகும்”

%g * * ॐ - -

பாராழிவட்டத்தார் பரவியிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்” (6-18-6)

"ஆரொருவம் உள்குவாருள்ளத்துள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந்தோன்றும்” (6-18-11)

என ஆளுடைய அரசரும்,

"அறிவினான் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க்கங்கே ஆரருள் புரிந்து”

என ஆளுடைய நம்பியும் அருளிய பொருளுரைகள் எல்லாச் சமயத்தாரும் தனித்தனியே செய்கின்ற வழிபாடுகள் அனைத்தும் உலக முதல்வனாகிய ஒருபெருங்கடவுளையே சென்று சார்கின்றன என்பதும் சமயங்கடந்த தனிமுதற் பொருளாகிய அவ்விறைவனே எல்லாச் சமயத்தார்க்கும் எளிவந்து அருள்சுரக்கும் பேரருள் முதல்வனாகத் திகழ்கின்றான் என்பதும் ஆகிய பேருண்மையினை நன்கு வற்புறுத்துகின்றன. மக்கள் தாம் தாம் போற்றும் தெய்வத் திருவுருவவேறுபாடுகளாலும் தாம் தாம் மேற்கொண்ட தத்துவக்கோட்பாடாகிய கொள்கை வேறுபாடுகளாலும் பிற்காலத்திற் சமயங்களிடையே பிணக்குக்கள் தோன்றி