பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

721


நினது தற்போதத்தால் சில செயல்களைச் செய்யத் தொடங்கிப் பழிக்கு ஆளாகாதே’ என அறிவுறுத்தியவாறு.

மேற்குறித்த திருவுந்தியாரின் பொருளை விரித் துரைப்பதாக அமைந்தது,

"யாதேனுங் காரணத்தால் எவ்வுலகி லெத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே - யாதலினால் பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய் பேதாபேதஞ் செய்வாய்பின்’ (82)

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். “உலகப் பொருள் களில் யாதேனும் ஒன்றை ஆய்வுக்குரிய பொருளாகக் கொண்டு அதனதன் அமைப்புக்கும் இயக்கத்திற்கும் உரியதனை ஏதுவாகக் கொண்டு நோக்கினாலும் எல்லா வுலகங்களிலும் உள்ள எவ்வகைப் பொருள்களும் சத்தியுடன் கூடிய சிவனுடைய அடையாளமாகவே யமைந்திருத்தலால் (கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொரு ளுண்மையினை யுணரப் பெற்ற நீ) அழிந்துமாறும் இயல்பினதாகிய உலகமும், என்றும் அழியாவியல்பினதாகிய சிவமும் வேறு வேறு பொருள்கள் எனக் கொண்டாலும் கொள்க, உலகுயிர் களாய்க் கலந்து இயங்கும் நிலையில் எல்லாம் பிரமமே என அபேதமாகக் கொண்டாலும் கொள்க, அன்றி இவை சொல்லும் பொருளும்போல் ஒருவாற்றான் ஒன்றாதலும் ஒருவாற்றான் வேறாதலும் ஆகிய பேதாபேதப் பொரு ளெனக் கொண்டாலும் கொள்க (அது பற்றிக் கவலை யில்லை) என்பது இதனால் அறிவுறுத்தப்படும் பொருளாகும்.

மேற்கூறிய பேதம், அபேதம்,பேதாபேதம் என்னும் மூவகைகளுள் ஒன்றைக் கடைப்பிடித்து இறைவனை நினைந்து வழிபாடு செய்வாயானால் எல்லாம் ஆம் இறைவன் இம்மூவகையுள் ஒன்றில் நின்று உனக்கு அருள்சுரப்பதுடன் இம்முத்திறமும் ஒருங்கமைய உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இங்ங்னம் இரண்டறக் கலந்து விளங்கும் இயல்பினையுடையான் அவ்விறைவன் என்னும் அத்துவித உண்மை பின்பு உனக்கு நன்கு புலனாகும் என்பார் பின்’ என்றார். பின் என்பது எச்சமாய் நின்று, பின் உனக்கு

ரை. சி. சா. வ. 46