பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அருத்துவன். இக்கருத்தினை மனத்துட்கொண்டே 'பால்வரை தெய்வம்’ என்ற தொடரால் தொல்காப்பியய்ர இைைறவனைக் குறித்துள்ளார். உழவர் செய்யுந் தொழிலுக்குத் தக்க பயனை அத்தொழில் நிகழ்ச்சிக்கு ஆதாரமாகிய விளைநிலம் விளைவிப்பதன்றி அவ்வுழவுத் தொழில் தானே விளைவிக்கமாட்டாது. அது போலவே உனவும் வித்துமாகத் தொன்று தொட்டு வரும் வினைப் பயன்களை உயிர்கட்குக் கூட்டுவிப்பவன் முதல்வனேயன்றி வினைதானே கூட்டுவிக்கும் ஆற்றலுடையதன்று என்பதே தமிழ் முன்னோர் நுனித்துணர்ந்த தத்துவக் கொள்கையாகும். தெய்வத்தைக் குறித்தும் வினையினைக் குறித்தும் தொல்காப்பியனார் காலத் தமிழ் மக்கள் கொண்ட இத்துணிவினைப் 'பால் வரை தெய்வம்’ என வரும் தொல்காப்பியத் தொடர் நன்கு புலப்படுத்தல் காணலாம்.

உலகுயிர்களை இயக்கும் முழுமுதற்பொருளாகிய கடவுளை வழிபட்டுப் போற்றுதல் மக்களது தலையாய கட ைமயென்பதும் வழிபடுதெய்வத்தின் திருவருளால் குறைவற்றபெருஞ் செல்வத்துடன் தம் குடும்பம் வாழையடி வாழையென இவ்வுலகில் நெடுங்காலம் நிலைபெற்று வளர இனிது வாழலாம் என்பதும் ஆகியவுண்மையினை முன்னைத்தமிழ்ச் சான்றோர் மக்களுக்கு அறிவுறுத்தி யுள்ளார்கள். நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறங்காப்ப இல்லற முதலிய நல்லறங்களாற் பழியின்றிப் புகழுடன் பூத்த செல்வமொடு புதல்வரைப் பெற்றுப் புதல்வரும் இத்தன்மையராகி நீடு வாழ்மின் என்று தம்பால் அன்புடையாரைத் தெய்வத்தின் திருவருளைத் துணைக் கொண்டு வாழ்த்தினார்கள். இவ்வாறு தெய்வத்தைப் பாதுகாவலாகப் புறத்தே நிலை பெறச் செய்து அத் தெய்வத்தின் திருவருளால் நீடுவாழ்மின் என வாழ்த்தும் வாழ்த்தியல் புறநிலைவாழ்த்து என வழங்கப் பெற்றது. எடுத்துக் கொண்ட செயல் இனிது நிறைவேறுதற்குக் காரணமாகிய கடவுள் தோன்றாத்துணையாய் நின்று நின்னைத் துன்பந் தொடராதவாறு நின்னைப் புறங்காப்பப் பழிதீர்ந்த செல்வத்தோடு வழிபவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்துதலால் இது புறநிலை வாழ்த்து என்னும்