பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எல்லாம் விளங்கும்’ என்னும் பொருளைத்தந்து நின்றது. எல்லாச் சமயத்தாராலும் மனமொழி மெய்களாற் சிந்தித்துத் துதித்து வழிபடப்பெறும் தெய்வம் ஒன்றே என்னும் இவ்வுண்மையினை வலியுறுத்தும் முறையில் அமைந்தது,

“மனமது நினைய வாக்குவழுத்த மந்திரங்கள் சொல்ல

இளமலர் கையிற் கொண்டங்கிச் சித்ததெய்வம் போற்றிச் சினமுதலகற்றி வாழுஞ் செயல் அறமானால் யார்க்கும் முனமொரு தெய்வம்எங்கும் செயற்கு முன்னிலையா

மன்றே”

எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.

ஆன்மபோதங்கெட எல்லாம் வல்ல இறைவனைத் தியானிக்கும் இயல்புடைய பெரியோர்கள், இவ்வுலக வாழ்வில் கருவி கரனச் சேட்டைகளின் நீங்கிச் சிவபரம் பொருளின் அருட்செயலே தம்பால் விளங்கப்பெற்றுத் திகழும் தூய நிலை சீவன் முத்தி நிலை எனப்படும். இங்ங்னம் பசுகரணங்களெல்லாம் பதிகரணங்களாகப் பெற்ற செம்புலச் செல்வர்களாகிய இப்பெருமக்களைக் “காணுங்கரணங்க ளெல்லாம் பேரின்பமெனப்பேனும் அடியார்” எனப் போற்றுவர் பெரியோர்.

“அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன்றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே”

(திருவாசகம்)

என்றவாறு, விழிப்புநிலையிலேயே உலகப்பொருள்களில் தோய்வற்று மேல்நிலையில் நின்று தன் செயலறச் சிவமேதானாகத் திகழும் திருவருள் நலம் வாய்க்கப்பெற்ற இப்பெருமக்களை,

‘சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்

சருவ சங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலேயுயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவர் அன்றோ"

(சித்தியார், சூ. 8. விருத்தம் 85)