பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

723


எனப்போற்றுவர் அருணந்தி சிவாசாரியார். பராவுதல்சஞ்சரித்தல். பராவுசிவர் என்றது, மக்கள் வடிவினை மேற்கொண்டு உலகிற் சஞ்சரிக்கும் சிவபரம்பொருள் என்னும் கருத்தில் சிவஞானிகளுக்கு வழங்கும் பெயராகும்.

“நிராமய பராபர புராதன பரவுசிவராகவருளென்

றிராவுமெதிராயது பராநிலை புராணனமராதி பதியாம்”

(3, 5.6)

எனவரும் ஆளுடையபிள்ளையார் தேவாரத்தில் இப்பெயர் இடம் பெற்றுள்ளமை காணலாம். பராவுசிவர் எனப் போற்றப்பெறும் இப்பெருமக்களை நடமாடுங்கோயில் நம்பர்’ (திருமந்திரம் 1857) எனக் குறிப்பிடுவர் திருமூல நாயனார்.

இங்ங்னம் தன் செயல் என்பது ஒனறின்றி உயிர் முனைப் படங்கிச் சித்தம் சிவமாகப் பெற்ற மெய்யடியார்கள் இவ்வுலகிற் செய்யும் செயல் அனைத்தும் தவச்செயலாம் என்பதும், அவற்றை இறைவன் தன் செயலாகவே ஏன்றுகொண்டு அவரோடு ஒட்டி உடனாய் நின்று அருள்புரிவன் என்பதும்,

“எனதுரை தனதுரையாக”

எனவும்,

“உயிராவணமிருந்துற்று நோக்கி உள்ளக்கிழியின்

உருவெழுதி உயிர் ஆவணஞ்செய்திட்டு உன்கைத்தந்தால் உணரப்படுவாரொடொட்டிவாழ்தி” (6.25.1)

Gা ল্যা ৭|tp,

“தொடர்ந்தென் சிந்தைத் தன்னுருவைத் தந்தவனை”

எனவும்,

“சித்தஞ்சிவ மாக்கிச்செய்தனவே தவமாக்கும்

அத்தன் (திருவாசகம்)