பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

725


உடம்பின் தொழில்களாக நிகழ்வது. இதன் இயல்பினை,

"துண்னெனவிரும்பு சரியைத் தொழிலர் தோணிபுர மாமே” (3.81.7)

“கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி” (2.43.5).

என ஞானசம்பந்தரும்,

“பெரும்புலர் காலைமாலை பித்தர்க்குப்பத்தராகி அரும்பொடு மலர்கள் கொண்டங்கார் வைத்தே

யுள்ளேவைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினாலிட வல்லார்க்குக் கரும்பினிற்கட்டிபோல்வார் கடவூர்வீரட்டனாரே'

(4.31.4)

“விளக்கினார் பெற்றவின்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும் துளக்கில் நன்மலர்தொடுத்தால் தூயவிண்ணேறலாகும் விளக்கிட்டார் பேறுசொல்லின்மெய்ந்நெறிஞானமாகும் அளப்பில கீதஞ்சொன்னார்க்கடிகள் தாம் அருளுமாறே”

(4.77.33)

“நிலைபெறுமாறெண்ணுதியேல் நெஞ்சேநீவா

நித்தலும் எம்பிரானுடைய கோயில்புக்குப்

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித்

தலையாரக்கும்பிட்டுக் கூத்து மாடிச்

சங்கராசய போற்றிபோற்றியென்றும்

அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்

ஆரூரா வென்றென்றே அலறாநில்லே” (6.31.3)

எனத் திருநாவுக்கரசரும் விளக்கியுள்ளமை காணலாம்.

கிரியையாவது, திருக்கோயிலில் எழுந்தருளிய சிவலிங்கத் திருவுருவாகிய அருவுருவத் திருமேனியே பொருளென்றுணர்ந்து புறத்தேயும் அகத்தேயும் பூசனை புரிந்து வழிபடுதலாகும். இதன் இயல்பினை,