பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

727


வழிபட்டார் வானாளக் கொடுத்தியன்றே”

எனவும் திருநாவுக்கரசரும்,

“அகத்தடிமை செய்யும் அந்தணன்தான்

அரிசிற்புனல் கொண்டுவந்தாட்டுகின்றான்” (7.9.6)

எனவும்,

'முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்”

எனவும் நம்பியாரூரரும் குறித்துள்ளமை காணலாம்,

யோகமாவது, இறைவனுக்குரிய உருவம், அருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளுள் அருவத் திருவுருவமேயே பொருளென்றுணர்ந்து, இறைவனை உள்ளத்துள்ளே வைத்து வழிபடுதல். இதன் இயல்பினை,

“சினமலியறுபகை மிகுபொறி சிதைதருவகை வளிநிறுவிய மனனுணர்வொடு மலர்மிசையெழுதருபொருள் நியதமும்

. உணர்பவர் தனதெழிலுருவது கொடுவடை தகுபரனுறைவது

நகர்மதிள் கனமருவிய சிவபுரநினைபவர் கலைமகள் தரநிகழ்வே g’”

(1.21.5)

என ஞானசம்பந்தரும்,

'உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பர் காளைதாதை கழலடி காணலாமே.” (4.75.4)

“உயிராவண மிருந்துற்று நோக்கி

உள்ளக் கிழியின் உருவெழுதி உயிர் ஆவணம் செய்திட்டுன் கைத்தந்தால் உணரப்படுவாரோ டொட்டிவாழ்தி” (6.25.1)

என நாவுக்கரசரும்,