பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


f ア2

&

'ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற

ஒண்பொருள்” (7.45.4)

“தேடுவன் தேடுவன் செம்மலர்ப்பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கைபிடித்து மகிழ்ந்துளே ஆடுவன் ஆடுவன் ஆமாத்து ரெம் அடிகட்கே” (745.9)

"நாற்றானத் தொருவனை நானாயபரனை”

எனச் சுந்தரரும் தெளிவாகக் குறித்துள்ளார்கள்.

ஞானமாவது, மேற்குறித்த வண்ணம் உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் முறையே வழிபட்டுவர ஆன்மாவின்கண் நிகழும் பக்குவ முதிர்ச்சியாலே உள்ளவாறு மெய்யுணர்வு விளங்கி, உலகெலாங் கடந்தும் உயிர்க்குயிராய் அணுத்தொறும் விரவியும். என்றும் ஒருபெற்றியதாயுள்ள உண்மையறிவு இன்பமே இறைவனது திருமேனியாம் என்றும் முற்குறித்த உருவம் அருவுருவம் அருவம் என்பன பருமைவழியே நுண்மையினையுணர்தல் என்னும் முறைப்படி ஞானத் திரளாய் நின்ற இறைவனை உணர்தற் பொருட்டும் வழிபடுதற் பொருட்டும் கொண்ட திருமேனிகளேயென்றும் உணர்ந்து, முன்னர் க்குறித்த உடம்பின்தொழில் மனத்தொழில் இரண்டினையும் கைவிட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடுதல் ஆகிய அறிவுத் தொழிலளவில் அமைந்து இறைவனை வழிபடுதலாகும். ஞானநன்னெறியாகிய இதனை,

“நுண்ணறிவால் வழிபாடு செய்யுங்காலுடையான்” (1.5.4)

"ஊனத்திருள் நீங்கிட வேண்டில்

ஞானப்பொருள் கொண்டடிபேனும்” (1.38.3)

என ஆளுடையபிள்ளையாரும்,

“ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள்

ஞானத்தால் தொழுவேனுனை நானலேன்