பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

733


ي

அவன் அவள் அது எனப் பகுத்துரைக்கப்படும் உலகத்தொகுதி தோன்றுதல், நிலைபெறுதல், ஒடுங்குதல் ஆகிய முத்தொழிலுடைமையால் அஃது ஒரு வினைமுதலால் தோற்றுவிக்கப்பெற்ற உள்பொருளே எனவும், உள்பொரு ளாகிய உலகம் உயிர்களின் மலத்தீர்வு காரணமாகத்தான் ஒடுங்குதற்குக் காரணமாகிய கடவுளாலேயே மீளவும் தோற்றுவிக்கப்பெற்று நிலைபெறுவதெனவும், உலகிற்கு அந்தத்தைச் செய்து ஒடுக்கும் கடவுளே அதனைத் தோற்றுவிக்கும் ஆதியும் ஆவான் எனவும் அறிவுறுத்துவது,

“அவனவ ளதுவெனும் அவைமூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”

எனவரும் சிவஞானபோத முதற்குத்திரமாகும். அவன் அவள் அது எனப்பகுத்துரைக்கப்படும் உலகத்தொகுதி தோன்றுதல் நிலைபெறுதல் ஒடுங்குதல் ஆகிய முத்தொழிற் படுவதென்பதும் அங்ங்னம் உலகினை மூவுருவில் நின்று முத்தொழிற்படுத்தும் இறைவன் ஒருவனே என்பதும் ஆகிய உண்மைகளை,

که به

புவம் வளிகனல் புனல் புவிகலையுரைமறை திரிகுண

- மமர்நெறி திவமலிதரு சுரர்முதலியர் திகழ்தரு முயிரவையவை தம பவமலி தொழிலது நினைவொடுபதும நன்மலரது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் செழுநிலனினில் நிலை

பெறுவரே (1,211)

কাঞ্চল আto,

“மலைபல வளர்தரு புவியிடை மறைதருவழிமலி

மனிதர்கள் நிலைமலிசுரர் முதலுலகுகள் நிலைபெறுவகை

நினைவொடுமிகும் அலைகடல் நடுவறிதுயிலமரரியுருவியல் பரனுறைபதி சிலைமலிமதிள் சிவபுர நினைபவர் திருமகளொடு

திகழ்வரே (1,21.2)