பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"பழுதில கடல்புடை தழுவிய படிமுதலியவுலகுகள் மலி குழுவிய சுரர்.பிறர் மனிதர்கள் குலமலிதரு முயிரவை

{LIశ6) முழுவது மழிவகை நினைவொடு முதலுருவியல்

பரனுறைபதி செழுமணியணி சிவபுரநகர் தொழுமவர் புகழ்மிகு

முலகிலே’ (1.21.3)

எனவும் வரும் திருப்பாடல்களில் திருஞானசம்பந்தர் அறிவுறுத்தியருள்கின்றார். இறைவன் ஒருவனேயாயினும் அம்முதல்வன் முத்தொழில்களைச் செய்யுமிடத்து அவ்வத் தொழிலுக்கு உரிய வகையில் மூவுருவில் நின்று இயற்றி யருள்கின்றான் என்பது திருமுறையாசிரியர் கருத்தாகும். இந்நுட்பம்,

“அரனென்கோ நான்முகன் என்கோ அரிய

பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழிய தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை யின்று” (அற்புதத். 18)

எனக் காரைக்காலம்மையாரும், படைத்தளிப்பமும் மூர்த்திகளாயினை (திருவெழுகூற்றிருக்கை) எனச் சம்பந்தரும்,

“ஒருவனாய் உலகேத்த நின்றநாளோ

ஒருருவே மூவுருவ மானநாளோ”

என அப்பரடிகளும்,

“மூவுருத்தனதாம் மூலமுதற் கருவை'

என நம்பியாரூரரும்,

{& w - - * * - -

அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்

அரனாய் அழிப்பவனுந் தானே.”

(திருக்கயிலாய ஞானவுலா)

எனச் சேரமான் பெருமாள் நாயனாரும்,