பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

739


வேறுபடுதல் இயலாது என்னும் கருத்தால் உலகு உயிர்களை இயக்கியருளும் முதல்வன் ஒருவனாகவேயிருத்தல் வேண்டும் என்பார் ‘ஒன்றலா ஒன்று (சிவ. சூ. 1 வெ.) என வரையறுத் தோதினார் மெய்கண்டார். 'ஒன்றலா ஒன்று என இறைவனைக் குறித்து வழங்கப்பெற்ற இத்தொடர்,

“எந்தையாரவர் எவ்வகையார்கொலோ’ “ஒருவனாயுலகேத்த நின்றநாளோ” (6) “ஒன்றும் நீ அல்லை” (திருவாசகம்)

என வரும் திருமுறைத் தொடர்களை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம்.

ஒன்றலா ஒன்றாகிய அப்பரம்பொருள் போல் என்றும் அழிவின்றி நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி வீடுபேற்றின் கண்ணும் பலவாற்றானும் பரம்பொருளுக்கு மீளா அடிமையாகும் என்பார். அதனின் ஈறலா ஒன்று, பலவாறே தொழும்பாகும் அங்கு என்றார் அங்கு என்றது வீடுபேற்றுநிலையினை. தொழும்பு - அடிமை. பலவாறே தொழும்பு ஆதலாவது, இருள் நீங்கிய நிலையிலும் கண் ஞாயிற்றின் ஒளியையின்றியமையாதவாறு போல மலம் நீங்கிய முத்தி நிலையிலும் ஆன்ம அறிவுக்கு முதல்வனது துனை இன்றியமையாதவாறும் ஆன்மா, கண் படிகம் ஆகாசம் போலச் சார்ந்ததன் வண்ணமாயன்றி முதல்வன் போலத் தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாதவாறும், முதல்வன்போல் ஐந்தொழில் செய்யும் வினை முதலாம் உரிமையின்றிச் சிவாநுபவம் ஒன்றினுக்கே உரித்தாயவாறும் முதல்வனை நோக்கத்துல அறிவாகலால் விளக்கொளியுள் கன்னொளியடங்கி நிற்றல்போல முதல்வனது விரிவினுள் அடங்கி நிற்குமாறும் பற்றி முதல்வனுக்கு என்றும் அடிமை யாதலாம்.

"நாமார்க்குங் குடியல்லோம் ..............

கோமாற்கே நாமென்னும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியினையே குறுகினோமே”

என நாவுக்கரசரும்,