பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நான்கனுள் ஒத்தாழிசைக் கலியுள் ஒன்றாக அடங்கும். அவ்வாறு தெய்வத்தை முன்னிலைப் படுத்துப்பரவும் ஒத்தாழிசைக்கலி வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும். தெய்வத்தைப் பரவிப் போற்றும் இத்தகைய செய்யுளின் அமைப்பினை,

“அவற்றுள்

ஒத்தாழிசைக்கலி இருவகைத் தாகும்”


“ஏனையொன்றே

தேவர்ப்பராவுதல் முன்னிலைக் கண்ணே”

"அதுவே

வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்தே"

என வரும் சூத்திரங்களால் தொல்காப்பியனார் குறித்துள்ளார். தெய்வத்தைப் பரவுதற்குரிய வண்ணகம் ஒரு பாகு ஆகியவற்றுள் வண்ணகத்தில் இடம் பெறும் தரவு, தாழிசை எண், வாரம் (சுரிதம்) என்னும் உறுப்புக்கள் பற்றியும் ஒருபோகின் வகையாகிய கொச்சகவொருபோகு அம்போதரங்கவொருபோகு ஆகியவற்றின் அமைப்புப் பற்றியும் செய்யுளியல் 135 முதல் 146 முடியவுள்ள சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளார்.

இனி, தெய்வநம்பிக்கை காரணமாக மக்களிடையே நிகழுஞ் செயல் முறைகள் பற்றியும் தொல்காப்பியனார் தமது நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். மக்கள் தம் உள்ளக் கருத்தைப் பிறர்க்கு வற்புறுத்தி உறுதிமொழி கூறுமுகமாக வழிபடு தெய்வத்தின் முன் னிலையிற் சூளுறவு செய்து தெளிவுபடுத்தல் நெடுங்காலமாக நிலைபெற்று வரும் உலகியல் நடைமுறையாகும். இம்முறையினை முன்தேற்று' (சொல்லதிகாரம்-383) என்ற சொல, ல ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில்

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 127.

12. மேலது. 133.

13. மேலது. 134.