பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

741


மெய்ந்நூல்கள் கூறும் இறைவனது இயல்பாகும். இவ்வியல்பினைத் தெளிவுபட அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது,

“ஈறாய் முதலொன்றாயிரு பெண்ணாண் குணமூன்றாய்

மாறாமறை நான்காய் வருபூதம் மவையைந்தாய் ஆறார் சுவையேழோசையோ டெட்டுத்திசை தானாய் வேறாயுடனானானிடம் விழிம் மிழலையே” (1-11-2)

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரமாகும். இத்திருப் பாடற்பொருளை உளங்கொண்டு சைவசித்தாந்தம் கூறும் உயிர்நிலைக் கொள்கையாகிய சுத்தாத்துவித உண்மையினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது.

“ஈறாகியங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய்

மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய் உடனாயிருக்கும் உருவுடைமையென்றுங் கடனாயிருக்கின்றான் காண்” (86)

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும்.

“உலகெலாம் ஒடுங்கிய காலமாகிய அவ்விடத்து, முழுமுதற் பொருளாகிய சிவம் ஒன்றுமேயாகியும், மீண்டும் படைப்புக் காலமாகிய இவ்விடத்துச் சத்தியும் சிவமும் என இரண்டாகியும் எல்லாவற்றையும் சத்தியிடமாய் நின்று மாறுபடாத ஐம்பெரும் பூதம் ஞாயிறு திங்கள் ஆன்மா என்னும் எண்பேருருவினனாகியும் இங்குச் சொல்லப்பட்ட உலகுயிர்த்தொகுதியுடன் பிரிவறக் கூடியிருக்கு நிலையிலும் அவற்றின் தன்மை தன்னைப் பற்றாதவாறு அவற்றின் வேறாகியும், உயிர்க்குயிராய் உள்நின்றுஅறிவித்தும் அறிந்தும் உதவுதலால் உயிர்களோடு உடனாகியும் இவ்வாறு ஒன்றாய் வேறாய் உடனுமாயிருக்கும் தன் உண்மையினை எக் காலத்தும் தனக்குரிய முறைமையாகக் கொண்டிருக்கின்றான் அம் முதல்வன் அவனது இயல்பினை (மாணவனே) கண்டுனர்வாயாக’ என்பது இதன்பொருளாகும். இதன்கண் “ஈறாய் முதலொன்றாய் என்றது வேறாதலையும், மாறாத எண்வகையாய் என்றது ஒன்றாதலையும், உடனாயிருக்கும்