பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உருவுடைமை என்றது உடனாதலையும் உணர்த்தி நின்றன.

இவ்வான்மாக்களுக்கு இருவினைமுதல்வனது ஆணையால்வரும் என்பார், ஆணையின் இருவினையின் போக்கு வரவு புரிய என்றார். ஒருவன்தான் செய்தவினையின் பயனைத்தானே அனுபவித்தல் வேண்டும் என்னும் நியதியை

“முந்திச் செய்வினை இம்மைக்கண்வந்து

மூடுமாதலின்’

என்பதனால் நம்பியாரூரரும்,

“மெய்த்தன்னுறும் வினை”

என்பதனால் ஞானசம்பந்தரும் உடன்பட்டுக் கூறியுள்ளனர். அறிவிலதாகிய அவ்வினைதானே செய்தோனையடைந்து பயன்தருதல் இயலாது. விருப்பு வெறுப்புடைய உயிர்கள் தாமே தாம்செய்த வினைப்பயன்களை அறிந்து எடுத்துக் கொண்டு நுகர்ந்து கழிக்கும் பேரறிவும் நடுநிலையும் ஒருங்கு உடையன அல்ல. எனவே உயிர்கள் செய இருவினைப் பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி செய்பவன் நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாகிய இறைவன் ஒருவனே என்பது சைவ சமயத்தின் துணிபாகும். இக்கொள்கை ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவர்க்கும் உடன்பாடென்பது முன்னர் விளக்கப்பெற்றது.

உயிர்கட்கு இரு வினைப் பயன்களை ஊட்டும் இறைவன் தீவினைப்பயனை அருத்தும்போது, நோயாளர் களின் பிணிநீக்கும் மருத்துவன் நோய்தீர்க்கும் கசப்பு மருந்தினை வெல்லக்கட்டி முதலிய இனிய பொருளோடும் கலந்து அருத்துவது போன்று உயிர்கள் நுகர்தற்குரிய தீவினைப்பயனை இனிமையைத்தரும் நன்மையுடனே கூட்டி நுகரும்படி செய்விப்பான் என்பதும் உயிர்கள் செய்த பாவங்கள்தீர நல்வினையையும் தந்தருளுவான் என்பதும்,

“இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன்”

“பண்டுநாம் செய்தவினைகள் பறையவோரருள் நெறிபயப்பார்”