பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இறைவனது பெருங்கருனைத் திறத்தினையும் ஒருங்கு உணர்த்துவதாக அமைந்தது,

"இருள்தரு துன்பப்படலம் மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும்

பொருள்தரு கண்ணிழந்துண்பொருள் நாடிப்புகலிழந்த குருடருந்தம்மைப்பரவக் கொடுநரகக்குழிநின் றருள் தருகைகொடுத்தேற்றும் ஐயாறன் அடித்தலமே”

என வரும் திருவிருத்தமாகும். “ஆனவ வல்லிருளால் உளதாகிய துன்பப்படலமானது, உயிரின் அறிவாகிய கண்னொளியைத் தடைசெய்து மறைத்து நிற்றலால் மெய்யுணர்வாகிய கண்னொளியையிழந்து நுகர்பொருளை நாடிப்பெறும் உபாயத்தினையிழந்து பிறவிக்குருடரும் தம்மைப் பரவியுய்திபெறும்படி கொடிய இருளுலகமாகிய நரகக்குழியினின்றும் தனது அருளாகிய கையினால் எடுத்து உய்யும்படி செய்தருளுவது ஐயாற்றிறைவரது திருவடியாகிய அருட்சத்தி என்பது இத்திருவிருத்தத்தின் பொருளாகும்.

உயிர்கட்கு ஊனத்தை விளைவிக்கும் இருள் என்பதொரு மலம் உண்டென்பதும், அவ்விருள் நீக்கத்திற்கு இறைவன் அறிவுறுத்தும் சிவஞானமாகிய பொருளையே துணையாகக் கொண்டு இறைவனது திருவருளைப் புகழ்ந்து போற்றி வழிபடுதல் இன்றியமையாதென்பதும்,

“ஊனத்திருள் நீங்கிட வேண்டின்

ஞானப்பொருள் கொண்டடி பேணும்’ (1-38-3)

"ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல்

ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப்பொருள்

போலும்’ (1-89-3)

எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய

தவாரத்தால் நன்கு புலப்படுத்தப் பெற்றுள்ளமை Gff GSST GAMTID.

ஆணவமாகிய இருள்நீங்க நோக்கும் ஞானநாட்டம் ஆன்மாதகளுக்கு இயல்பாக அமையவில்லையென்பதும் உயிர்களின் அகத்திருளை நீக்கி நற்பொருளையறிவுறுத்தி