பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

749


'பிறப்பு’ என்றது மாயாகாரியத்தையும் குறித்து நின்றன. இத் தொடரையுளங்கொண்டு 'ம்லந்தாங்கிய பாசப்பிறப்பறுப்பீர்” (7-82-6) என இறைவனைப் போற்றினார் சுந்தரர்.

முப்பொருளுண்மையைக் குறிக்கும் பதி, பசு, பாசம் என்னும் பெயர்கள் தேவாரத் திருப்பதிகங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வுண்மை,

"பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்’ (1-76-3) எனவும், பசு பதியதன் மிசை வருகபதி எனவும், “பாசமதறத்து (3-79-10) எனவும் வரும் திருப்பதிகத் தொடர்களால் இனிது புலனாம்.

இவ்வான்மாக்கள் இருவினைகாரணமாக இறந்து பிறந்து வருந்தன்மையன என்பதனை,

"துறக்கப்படாத வுடைலைத் துறந்துவெந்து துவரோ டிறப்பன் இறந்தால் இருவிசும்பேறுவன் ஏறிவந்து பிறப்பன் பிறந்தநாற் பிறையணிவார் சடைப்பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோவென்றென் உள்ளங்கிடந்து

மறுகிடுமே”

எனவரும் திருவிருத்தத்தில் திருநாவுக்கரசர் குறித்துள்ளமை காணலாம். இத்திருவிருத்தத்தை அடியொற்றியமைந்தது,

“கண்டநனவைக் கனவுணர்வின்தான் மறந்து

விண்பறந்தத்துடு வினையினால் - கண்செவிகெட் டுள்ளதே தோற்ற உளம் அணுவாய்ச் சென்றுமனந் தள்ள விழுங்கருவிற்றான்” (சிவ. சூ. 2. வெ. 13)

எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். “உயிரானது பூதசாரம் முதலிய உடம்பின்கட் பொருந்தித் துறக்க நிரயங்களிற்சென்று இருவினைப்பயனாகிய இன்பத் துன்பங்களை அநுபவித்துப் பின்னர் நனவின்கண் கண்டவற்றைக் கனாக்காணுங்காலத்து மறந்து அறிவு வேறுபட்டாற்போல முன்னைக் கண்செவி கெட்டவாறும், உள்ளதே தோற்ற அதனூடு விண்படர்ந்தவாறும் அங்கு அநுபவித்தவாறும் ஆகியவற்றை மறந்து, முன்னுடம்பு