பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

67


நின்று சூளுறுவோர் தாம் சொல்லிய உறுதிமொழியிலிருந்து தவறுவராயின் அவர் செய்த சூளுறவே அவர்க்குத் துன்பம் விளைக்கும் என்பதனை இன்னாத் தொல்சூள்’ (தொல்கற்பியல்-6) என்ற தொடரால் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். நல்லுழின் ஆனையால் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடிய இயற்கைப் புணர்ச்சியிலே தலைவன், தெய்வத்தின் முன்னிலையில் தலைவியை நோக்கி “நின்னைப்பிரியேன்” எனச் சொல்லிய உறுதிமொழியில் தவறினானாக, அதனை எண்ணிய தலைவி தன் தலைவனது தவறினால் பெருந்தீங்கு விளையும் என வருந்திய காலத்துத் தோழி தலைவனை அணுகி 'நீ சூளுறவில் தவறியதால் உளவாம் ஏதத்திற்கு அஞ்சி யாம் பெரிதும் வருந்துகின்றோம்’ எனத் தலைமகளின் துயரத்தை எடுத்துக் கூறி வருந்துதலும் உண்டு. தோழி கூற்று நிகழ்த்தும் இடங்களைத் தொகுத்துரைக்குமிடத்து சூள்வயிற்றிறத்தாள் சோர்வு கண்டழியினும் எனவரும் தொடரால் தொல்காப்பியனார் இச்செய்தியினைக் குறித்துள்ளமை காணலாம்.

நற்றாய் தன்மகள் தலைமகனோடு உடன்போகிய காலத்துத் தன் மகளது பிரிவினால் வருந்தித் தன்னையும் தன்மகளாகிய தலைவியையும் அவள் காதலனாகிய தலைவனையும் குறித்துத் தனக்கும் அவ்விருவர்க்கும் உளவாகும் நன்மையும் தீமையும் அச்சமும் அவ்விருவரும் தன்னை வந்து சார்தலும் ஆகிய நிகழ்ச்சிகளை நிலைபெற்ற நிமித்தம், நற்சொல், தெய்வம் என்பவற்றோடு பொருத்திப் பார்த்து “இதற்கு முன் இன்ன தன்மையராய் இருந்தார், இப்பொழுது இன்னநிலையில் இருக்கிறார்கள், இனிமேல் இன்னநிலையினர் ஆவர்' எனத் தலைவியின் ஆருயிர்த் தோழியை நோக்கியும் கண்டோரை நோக்கியும் புலம்புதல் உலகியலிற் காலந்தோறும் காணப்படும் நிகழ்ச்சியாகும். இச்செய்தியினை,

'தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி

மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சஞ் சார்தலென்

றன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ