பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

751


செம்புலச் செல்வர்கள் தேவார ஆசிரியர்கள் ஆவர். ஒரு தெய்வவழிபாட்டினை அறிவுறுத்துஞ் சமயமே சிறந்தது என்பர் அறிவர். ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் எனச் சாதிவேறுபாடற்ற தனிப்பெருஞ் சிவவழிபாட்டினையே திருமூலரும் அறிவுறுத்தியுள்ளார்.

“ஒருவன் கழல்அல்லாது எனது உள்ளம் உணராதே" 'கூத்தாநின் குரையார்கழலேயலாது ஒத்தநாவெனக்கெந்தை பிராணிரே”

"அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே’

எனத் தேவார ஆசிரியர் மூவரும் சிவபெருமான் ஒருவனையே போற்றியதுடன், தம் பாடல்களில் முருகன், விநாயகர் முதலிய கடவுளர்களைக் குறிக்க நேர்ந்த விடங்களில் தம்மால் வணங்கப்பெறும் சிவபெருமானால் தலையளிக்கப்பெற்ற சிறப்புடையவர்கள் என்ற அளவில் அத்தெய்வங்களைப் பாராட்டி, தாம் சிவபரம் பொருளைத் தவிர வேறு தெய்வங்களை நினையாத உறுதிப்பாடுடைய ராகத் திகழ்தல் கானலாம்.

திருாைனசம்பந்தர்க்குத் திருமணம் நிகழ்ந்தபோது அவர் தீவலஞ்செய்தலாகிய சடங்கினைச் செய்ய நேர்ந்த நிலையில் ஞானசம்பந்தர் யான் விருப்புறும் அங்கியாவார் விடையுயர்த்தவரே என்னும் மெய்ம்மையினை யுரைத்துத் திருநல்லூர்ப்பெருமனக்கோயிலை வலம்வந்து சுற்றத்தா ரோடு பற்றறுத்து உய்ந்த செய்தி பெரிய புராணத்தில் விரித்துரைக்கப்பெற்றது.

காணப்பட்ட உடம்பாற் காணப்படாத உயிர்க்கு உண்மை கூறும் முறையில்,

"உடலிலங்கும் உயிர் உள்ளளவுந்தொழ

உள்ளத்துயர் போமே” (1-3-8)

என்று அருளிச் செய்தார் திருஞானசம்பந்தர். இக்கருத்தினை யுளங்கொண்ட மெய்கண்டார் தாம் இயற்றிய சிவஞான போதத்தில் உயிருண்மை கூறும் மூன்றாஞ்சூத்திரத்தில்