பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

753


go

சம்பந்தரும்,

“என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்

சுவரெறிந்திது நம்மில்லம் புண்புலால் நாறுதோல் போர்த்துப் பொல்

லாமையால் முகடுகொண்டு

முன்பெலாம் ஒன்பது வாய்தலால் குரம்பையின்

மூழ்கிடாதே அன்பனாரூர் தொழுதுய்யலாம் மையல்கொண்டஞ்சல்

நெஞ்சே” (2-79-8)

என யாக்கையின் அமைப்பினையும் அதனது நிலையாமை யினையும் நெஞ்சிற்கு அறிவுறுத்தியுள்ளார். இங்கு எடுத்துக்காட்டிய திருமுறைப்பாடல்களால் காணப்படும் உருவாகிய உடல் கருவிகளுக்கு வேறாக அருவாகியதோர் உயிருண்மை வலியுறுத்தப்பட்டமை காணலாம்.

ஆன்மா மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக் காரணங்கள் நான்கனுள் ஒன்றன்று. ஆயினும் தன்னை அனாதியே மறைத்துள்ள சகசமலமாகிய ஆணவமலம் காரணமாகப் பொருள்களை உணருந் தன்மையை இழந்தது. ஆதலால் நுண்ணர்வின்மையின் சூழ்ச்சித் துண்ைவராகிய அமைச்சரது உதவியை நாடிய அரசனைப் போன்று அந்தக் கரனங்களாகிய கருவிகளோடு கூடிநின்று நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் உயிாப்படக்கம் என்னும் ஐவகையுணர்வு நிலைகளை புடையதாயிற்று என்பார்,

"அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று. அவை

சந்தித்தது ஆன்மா, சககமலத்து உணராது அமைச்சு அரசு ஏய்ப்பநின்று. அஞ்சு அவத்தைத்தே'

(சிவ. சூ. 4)

என்றார் மெய்கண்டார்.

ஐம்புலன் நாலாம் அந்தக்கரனம் (திருவெழு

கூற்றிருக்கை எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயலாலும், மனத்தொகைத் திருக்குறுந்தொகை

يَ يَة ، فعة . ع و " في بي وجبة