பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

757


சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை எனச் சிவதத்துவம் ஐந்தும், காலம், நியதி, கலை, வித்தை இராகம், புருடன், அசுத்தமாயை என வித்தியாதத்துவங்கள் ஏழும், நீலம், நீர், தீ வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்கள், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள், ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் தன் மாத்திரைகள் ஐந்து, வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்னுந்தொழிற்கருவிகள் ஐந்து, மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கு என ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் ஆக முப்பத்தாறு தத்துவங்களாகும்.

மேற்குறித்த தத் துவங்களின் காரியமாய் அமைந்தைைவ தாத்துவிகங்கள் என வழங்கப்பெறுவன. நிலத்தின் கூறாக மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை என்னும் ஐந்தும் நீரின் கூறாக ஓடும்நீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை என்னும் ஐந்தும் தீயின் கூறாக உணவு, உறக்கம், அச்சம், இணைவிழைச்சு, சோம்பல் என்னும் ஐந்தும் வளியின் கூறாக ஒடல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் என்னும் ஐந்தும், ஆகாயத்தின் கூறாக காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் என்னும் ஐந்தும் ஆக இருபத்தைந்தும் பூதகாரியங்களாகும். பிராணன் , அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என வாயுக்கள் பத்து.

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அலம்புடை, புருஷன், குரு, சங்கினி என நாடிகள் பத்து.

சொல்லுதல், செல்லுதல், கொடுத்தல், விடுத்தல், இன்புறுதல் என வசனாதிகள் ஐந்து.

சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என வாக்குக்கள் நான்கு.

சத்துவம், இராசதம், தாமதம் எனக் குணங்கள் மூன்று. தைசத அகங்காரம், வைகாரியகங்காரம், பூதாதி யகங்காரம் என அகங்காரங்கள் மூன்று. ஆக இவை அறுபதும் தாத்துவிகங்கள் எனப்படும்.