பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

759


பேணிய பதியினின்று பெயரும் போதறிய மாட்டேன் சேணுயர் மாடநீடு திருக்கொண்டிச் சரத்துளானே.”

(4-67-7)

எனவரும் பாடல்களில் திருநாவுக்கரசர் விரித்துக் கூறிய திறம் இங்கு நினைத்தற்குரியதாகும்.

இங்குக் குறித்த முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பினை மெய்கண்ட தேவர் மாணவருள் ஒருவராகிய திருவதிகை மனவாசகங்கடந்தார் தாம் இயற்றிய உண்மை விளக்கம் என்ற நூலில் விரித்துக் கூறியுள்ளமை இங்குக் குறிக்கத்தகுவதாகும்.

உயிர்கள் செய்யும் நலந்தீங்குகளையெல்லாம் அவ்வுயிர்களின் உள்ளத்துள்ளே நின்றறிந்து, நல்லன. இவை தீயன இவை என்று உயிர்கட்கு அறிவுறுத்தி நல்வழிப் படுத்தும் இறைவனது இருப்பினை உணரப்பெறாது தம்மனம் போனபடி நடக்கும் உலகமக்களைத் திருத்தக் கருதிய திருநாவுக்கரசர், அன்னோரது செயலைத் தம்மேல் ஏறிட்டுக்கொண்டு, இறைவனை நோக்கித்தமது பேதைமை யினை வெளியிட்டுரைப்பதாக அமைந்தது,

'கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைத்

கழித்துப்போக்கித் தெள்ளியேனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று வெள்கினேன் வெள்கிநானும் விலாவிறச்

சிரித்திட்டேனே' (4-75-3)

எனவரும் திருநேரிசையாகும். இத்திருப்பாடல் உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் இறைவனது உண்மையினை மக்களது அநுபவத்தில் வைத்து விளக்குந் தனிச் சிறப்புடையதாகும். திருத்தாண்டகத்தில்,

“நானேதும் அறியாமே என்னுள்நின்று

நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய்”

என்பதும் இக்கருத்தினதேயாகும். உயிரது ஆராய்ச்சி