பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முன்னிய காலம் மூன்றொடு விளக்கித்

தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்

போகிய திறத்து நற்றாய் புலம்பலும்

ஆகிய கிளவியும் அவ்வழியுரிய"

எனவரும் நூற்பாவில் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். குடும்ப வாழ்க்கையில் துன்பம் நேர்ந்தபோது தமது மக்கள் தெய்வத்தை எண்ணிப் புலம்புதல் உண்டு என்பது இச்சூத்திரத்தால் நன்கு புலனாதல் காணலாம்.

குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தம் வாழ்க்கையில் நேரும் துன்பத்தை நீக்கவும் விரும்பிய நன்மைகளைப் பெறவும் வேண்டி, நெல்லினாற் கட்டுப்பார்த்தும் கழங்கு பார்த்தும் முருகப் பெருமானை வழிபாடு செய்யும் பூசகனாகிய வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்தி அவ்விழாவில் வேலன்மேல் தெய்வம் உற்று நிகழ்ந்தனவும் நிகழ்வனவும் உரைத்தருள உற்றன அறியும் முறை மலைவாணர் வழக்கமாகும். வெறியென்பது மனம் என்னும் பொருளுடைய சொல்லாகும். அச்சொல் தெய்வமனமாகிய முருகு என்னும் சிறப்புப் பொருளில் தமிழ்த் தொன்னூல் களில் வழங்கப் பெற்றுளது. மலரின்கண் உள்ளிருந்து தோன்றும் நறுமண்ம் போன்று வழிபடுவாருள்ளத்திலிருந்து தோன்றும் தெய்வவுணர்வாகிய முருகு வழிபடும் அவர்தம் மெய்யினும் வெளிப்பட்டு விளங்கும் இயல்பினை வெறி' என வழங்குதல் பழைய தமிழ் மரபாகும். தம் தொழுகுலமாக வழிபடப்பெறும் முருகப் பெருமான் வேலேந்தியாடும் பூசகனாகிய வேலன்மேல் ஆவேசித்து நின்று தம் குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் நிகழ்வனவற்றை அறிவித்தருளல் வேண்டும் என்னும் விருப்பத்துடன் முருகப் பெருமானுக்குச் செய்யப்படும் வழிபாடு வெறியாட்டு என வழங்கப்பெறும். இவ்வழிபாட்டின் பயனாக ஒத்த அன்பினராகிய காதலரிருவரிடையே மறைவில் நிகழ்ந்தனவும் தெய்வத்தால் வெளியாகி விடுதல் உண்டு. இவ்வாறு தெய்வ வழிபாட்டின் பயனாக நிகழும் நிகழ்வுகளை,

14. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினையியல், 39.