பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

761


யெல்லாம் நீக்கி மன்னுயிர்கட்கு அன்னையும் அத்தனுமாய் அருள்சுரந்து துணைநிற்பவன் ஆனைக்காவில் எழுந்தருளிய அண்ணலாகிய இறைவனே என்பதனை உணர்ந்து உய்திபெறுவீராக” என்றுஅறிவுறுத்துவதாக அமைந்தது,

“நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே

படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள் தடையொன்றின்றியே தன்னடைந்தார்க்கெலாம் அடையநின்றிடும் ஆனைக்கா அண்ணலே” (5-31-6)

எனவரும் திருக்குறுந்தொகையாகும்.

புண்ணியபாவமாகிய இருவினைகளிலும், அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து அவற்றை நீக்கும் ஆன்மாவின் அறிவின்கண் அவ்விருவினைப் பயன்களும் சமம் என்னும் உணர்வு தோன்றிய நிலையில் இனிய திருவரு ளாகிய சத்திகுருவாக எழுந்தருளிப் பசுபோத குணங்களை நீக்கிச் சிவஞானத்தை உபதேசித்தருளும் எனவும் அங்ங்னம் குரு அருளிய சிவஞானத்தால் ஆன்மா தற்போதங்கெடப் பெற்றால் அத்தகைய ஆன்மா மும்மலங்களுங்கெட்டுச் சிவமே ஆவன் எனவும் உணர்த்துவது,

"இருவினை நேரொப்பில் இன்னருட்சத்தி

குருவெனவந்து குணம்பலநீக்கித் தரும் அரன் ஞானத்தால் தன்செயலற்றால் திரிமலந்தீர்ந்து சிவனவன் ஆமே” (1527)

எனவரும் திருமந்திரமாகும். உயிர்த்திருவருட்பதிவு பெற்றுக் குருவருளால் தூய்மைபெறும். இந்நிலையினை விளக்குவது,

"இருவினைச் செயல்கள் ஒப்பின் இன்னருட்சத்திதோயக் குருவருள் பெற்று, ஞானயோகத்தைக் குறுகிமுன்வைத்

திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகி நாயகன்றன் பாதம் பெறுவது சுத்தமாமே.” (230)

எனவரும் சிவஞான சித்தியாராகும்.

உயிர் தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட