பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பேரறிவினை ஞானக்கண் எனவும் வழங்குதல் சைவ சித்தாந்த மரபாகும். இம்மரபு.

“ஊனத் திருள்நீங்கிட வேண்டின்

ஞானப் பொருள்கொண்டடி பேணும்”

எனவும்,

"ஊனப்பேர் ஒழிய வைத்தார் ஓதியேயுணர வைத்தார் ஞானப்பேர் நவில வைத்தார்” (4-30-7) "கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்”

(6-73-2) “அவனருளே கண்ணாகக் காணினல்லால்'

எனவும் வரும் திருமுறைத் தொடர்கள்.இம்மரபினைப் புலப்படுத்தல் காணலாம்.

குறையுணர்வாகிய பசு அறிவாலும் பாச அறிவாலும் உணரப்படாத இறைவனை அவனது திருவடி ஞானத்தால் தன்னறிவின் கண்ணே ஆராய்ந்து தெளிக. அத்திருவடி ஞானத்தால் நிலம் முதல்நாதம் ஈறாகிய பாசத்தொகுதி பரந்து திரிதற்கண் மிக்க வேகமுடைய பேய்த்தேரின் இயல்பினதாய்க் கழிந்தொழிவது என்று அறிந்து நீங்கவே, அங்ங்னம் நீங்குதற்கு ஏதுவாகிய பதி (சிவ ஞானம் பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும், அவ்வாறு பாசத்தொடர்பினை நீங்கிச் சிவஞானத்தைப் பெற்று முழுமுதற்பொருளைக் கண்டகாட்சி நிலை குலையாமைப் பொருட்டுத் திருவைந்தெழுத்தினை விதிப்படி யுச்சரித்தல் வேண்டும் என அறிவுறுத்துவது,

“ஊனக்கண் பாசம் உணராப்பதியை

ஞானக் கண்ணினிற் சிந்தைநாடி, உராத்துணைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி விதி என்னும் அஞ்செழுத்தே'

எனவரும் சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரமாகும். இறைவன் உயிரறிவாலும் கலையுணர்வாலும் அறியப் படாதவன் என்பது, “திருமாலும் நான்முகனும் தேடித்