பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

769


எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். 'தன்னையடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங் கடனாவதுதான் என அப்பரடிகள் எடுத்தாண்ட பழமொழி இவ்வெண்பாவில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

கானுந்தன்மையினையுடைய கண்ணுக்குப் புறப் பொருள்களைக் காட்டித் தானும் அதனுடன் கூடியிருந்து காணும் ஆன்மாவைப் போன்று இறைவனும் அறியுந் தன்மையதாகிய உயிர்களோடு கலந்து நின்று பொருள் காட்டும் உதவியினைப் புரிதலோடு அவ்வுயிருடன் கூடிக் கானும் உதவியினையும் புரிகின்றான் என்பதனை அறிவுறுத்துவது,

“காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்

கான வுள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரங்கழல் செலுமே”

எனவரும் சிவஞானபோதப் பதினோராஞ் சூத்திரமாகும். இது,

'உண்ணிலாப் புகுந்து நின்றங்

குணர்வினுக்குனரக் கூறி” (4-25-8)

“உள்ளத்தின் உள்ளிருந்தங் குறுதிகாட்டி”(4-5-6)

“நானேதும் அறியாமே என்னுள் நின்று

நல்லனவுந் தீயனவும் காட்டா நின்றாய்" (6-7)

எனக் காட்டும் உபகாரத்தையும்

“உள்குவாருள் கிற்றெல்லாம் உடனிருந்தறிதி (4-75-3)

எனக் காணும் உபகாரத்தையும் உணர்த்தும் நிலையில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் தொடர்களையும்,

"அறிவானுந்தானே அறிவிப்பான்தானே

அறிவாயறிகின்றான் தானே.” (அற்புத.)

எனவரும் காரைக்காலம்மையார் வாய்மொழியையும் அடியொற்றியமைந்துள்ளமை அறியற்பாலதாகும்.

சை. சி. சா. வ. 49