பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இறைவனடியார்கள் யாவராயினும் குலவேற்றுமை கருதாது அவர்களைச் சிவபெருமான் ஆகவே தெளிந்து வழிபடுதல் வேண்டும் என்பது திருமுறை ஆசிரியர்கள் உலகமக்களுக்கு அறிவுறுத்திய உறுதியுரையாகும். தெய்வம் உண்டெனத் தெளிந்தோர் அத்தெய்வத்தை வழிபடுதல் போலவே தெய்வமுண்டெனத் தெளிந்த அடியார்களையும் தெய்வமாகப் பேணிவழிபடுதல் வேண்டும் என்பார், ‘தெய்வந் தெளியின் தெளிந்தோர்ப் பேணுமின்’ என அறிவுறுத்தினார் இளங்கோவடிகள்.

“நலமிலராக நலமதுண்டாக நாடவர்நாடறிகின்ற

குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை”

எனக் குலச்சிறைநாயனார் சிவனடியார்களை வழிபட்ட திறத்தினை மங்கையர்க்கரசி' என்னும் திருப்பதிகத்தில் ஆளுடைய பிள்ளையார் விரித்துக் கூறியுள்ளார்.

“எவரேனுந்தாமாக இலாடத்திட்ட

திருநீறுஞ் சாதனமுங்கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்டபோதே

உகந்தடிமைத் திறம்நினைந்தங்குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்தீசன்திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.” (6-61-3)

எனவரும் திருத்தாண்டகம் சிவனடியார்களைச் சிவன் எனவே தெளிந்து வழிபடும் முறையினை அறிவுறுத்து கின்றது. திருநாவுக்கரசர் அறிவுறுத்திய முறையில் சிவனடியார்களைச் சிவனெனவே தெளிந்து வழிபட்டவர் நம்பியாரூரர் என்பது,

డథ

துணிப்படும் உடையுஞ்சுண்ண வெண்ணிறும் தோற்றமும் சிந்தித்துக் காணில் மணிப்படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன்”

என வரும் அவரது வாய்மொழியால் நன்கு விளங்கும்.