பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

69


"கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும்

ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்"

எனவும்,

“வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்"

எனவும் வரும் தொடர்களால் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார்.

தெய்வங்கொள்கை என்பது, வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடைய முதியோருள்ளத்தில் மட்டுமன்றி வாழ்க்கையினைத் தொடங்குதற்குரிய இளம் பருவத்தினராய தலைவி, தோழி முதலியோருள்ளத்திலும் ஒப்பத் தோன்றும் இயல்பினதாகும். இன்னது விளையும் என்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக் காலத்தே ஒருவனும் ஒருத்தியு மாகிய அன்புடையார் இருவர் நண்பு செய்தொழுகுங்கால், அவர்கள் வருந்தாவண்ணம் அவ்விருவர்க்குந் தோன்றாத் துணையாய் நின்று அருள் புரிவதோள் முழுமுதற் பொருளாகிய கடவுள் உண்டு எனவுனர்ந்த தோழி அவ்விருவர்க்குந் திருமணம் விரைவில் நிறைவேறுமாறு அருள்புரிதல் வேண்டும் எனக் கடவுளை ஏத்தி வழிபடுதல் இயல்பு. இங்ங்ணம் தலைவியின் வாழ்வோடு ஒன்றிய உள்ளத்தினள்ாகிய தோழியின் அன்புரிமை பற்றிய இவ்வழிபாட்டினை விளக்குவது,

“நாமக் காலத் துண்டெனத் தோழி

ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்”

என வரும் தொல்காப்பியத் தொடராகும்.

மனை மாட்சியிற் சோர்வில்லாத தலைவியைத் தலைவன் மணஞ் செய்து கொள்ளுதல் வேண்டிக் கடவுளைப் பரவிப் போற்றிய தோழி, தான் வேண்டிய வண்ணமே அவ்விருவர்க்கும் திருமணம் நிறைவேறிய நிலையில் தனது வேண்டுகோளினை ஏற்று அருள் புரிந்த

15. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 25.

16. மேலது, 2.