பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“செம்மலர் நோன்றாள் சேரலொட்டா

அம்மலங்கழிஇ அன்பரொடுமரீஇ மாலற நேயம் மலிந்தவர்வேடமும் ஆலயந்தாலும் அரனெனத் தொழுமே”

எனவரும் பன்னிரண்டாஞ் சூத்திரமாகும். பன்னிரண்டாந் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்திற் கூறப்படும் அடியார் செய்திகள் சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்திரப் பொருளுக்குரிய இலக்கியங்களாக அமைந்திருத் தலையுணர்வோர், பன்னிருதிருமுறைகளின் பயனாக அமைந்ததே மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்த சாத்திரம் என்னும் மெய்ம்மை யினைத் தெளிவாக உணர்வார்கள் என்பது திண்னம்.

இடையறாப் பேரன்பால் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சத்தராய் மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர்ததும்ப உள்ளங் கசிந்துருகிய அடியார்களுடனே இறைவன் பிரிவின்றி உடனாய் நிற்பன் என்பது,

“பண்ணிற்பொலிந்த வீணையர் பதினெண்கணமும்

உண்ணாநஞ்

கண்ணப்பொலிந்த மிடற்றினால் உள்ளம் உருகில்

உடனாவர்” (2-111-4)

எனவும்,

“உயிராவணமிருந்துற்று நோக்கியுள்ளக் கிழியினுருவெழுதி

உயிர் ஆவணஞ் செய்திட்டு உன்கைத்தந்தார்

உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி” (6–25-1) எனவும் வரும் திருமுறைத் தொடர்களால் இனிது விளங்கும். இத்தொடர்களை அடியொற்றியமைந்தது.

"உள்ள முருகிலுடனாவரல்லது

தெள்ளவரியரென்றுந் தீபற சிற்பரச் செல்வரென்றுந்தீபற” (7)

z

எனவரும் திருவுந்தியாராகும். "மேலான ஞானப்பெருஞ்