பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

773


செல்வத்தை வரையாது வழங்கவல்ல அருள்வள்ளலாகிய இறைவன், ஆன்மாக்களது உள்ளம் (தீயிற்பட்ட மெழுகு போன்று) உருகிய பக்குவநிலையினைப் பெற்றால் ஆன்மா வோடு ஒட்டி உடனாவர். உள்ளம் உருகப் பெறாத ஏனை யோர் தமது சுட்டறிவினால் ஆராய்ந்தறிந்து கூடுதற்குரிய எளிமை நிலையினர் அல்லர்” என்பது இதன்பொருளாகும்.

அடியார்கள் தன்னை அன்பினாற்கருதத் தொடங்கு தற்கு முன்னமேயே விரைந்து முன்னின்று அருள்புரியும் பேரருளாளன் இறைவன் என்பதனை,

“எம்பிரான் என்றதே கொண்டென்னுளே புகுந்து நின்றிங்

கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர்வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு

மென்றால் எம்பிரான் எண்ணினல்லால் என்செய்கேன் ஏழையேனே’ (4-76-3)

எனவும்,

4% - o * - * , 3% தன்னை முன்னம் நினைக்கத்தருவான்

எனவும் வரும் திருமுறைகளால் அறியலாம். இத்திருமுறைப் பொருளை விளக்கும் நிலையில் அமைந்தது,

“கருதுவதன் முன்னங்கருத்தழியப்பாயும்

ஒருமகள் கேள்வனென்றுந்தீபற உன்ன அரியனென்றுந்தீபற” (19)

எனவரும் திருவுந்தியாராகும்.

ஆன்மாவின் உள்ளத்திலே தோன்றாது நிற்றலால் கள்வன் எனப்படும் இறைவனது இருப்பினை உள்ளவாறு கானவல் லார்க்கு அக்கள்ளந்தீர்தலின் தம்மையும் முதல்வனையும் காணுதல் கூடும் என்பதும் அங்ங்னம் கானவல்லார்க்கு ஆறு அத்துவாக்கள் வழியாக ஈட்டப் பட்ட வினைக்குவியல் அனைத்தும் கவரப்பட்டு அவர்தம் வெளிக்கு வெளியாய்ப் பரமாகாசமாகி விடும் ஐம்புல வேடர்களாற் கவர்ந்து கொள்ளப்படாத வீடுபேறும்