பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

775


பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்”

(பெரிய தடுத். 181)

எனவரும் சேக்கிழார் நாயனார் வாய்மொழியும் உலகப் பொருள்களைப் பாராது சிவபரம் பொருளையே நோக்கிய செம்புலச் செல்வர்களுடைய கருவி கரணங்கள் சிவ கரனங்களாகத் தூய்மைபெற்ற நிலையில், அவர்கள் இவ்வுலகில் துய்த்த சிற்றின்பமும் பேரின்பமாக நிறைவுபெற்ற தன்மைக்குச் சிறந்த இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவ்வுண்மையினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது,

“பெற்ற சிற்றின்பமே பேரின்பமாமங்கே

முற்றவரும் பரிசுந்தீபற முளையாது மாயையென்றுந்தீபற” (33)

எனவரும் திருவுந்தியாராகும்.

சிவயோக நெறியில் நிற்போர் பிராணவாயுவைப் புறத்தே போகாமல் ஒடுக்கி இறைவனது திருவருள் ஞானமாகிய விளக்கினையேற்றிப் புறத்தே செல்லும் இடைபிங்கலைகளின் வழிகளையடைத்து நன்புலன் ஒன்றி அகத்தே மேல்நோக்கிச்செல்லும் சுழுமுனை வழியினைத் திறந்து திருவைந்தெழுத்தின் துணைகொண்டு நாத தத்துவத்தில் நிலைபெற்ற சிவபரம்பொருளை ஆறாதாரங் களுக்கும் மேலான மீதானத்திலே கூடிநின்று உலக வாதனை களாலுளவாம் இடர்களை நீங்கி இன்புறுவர். இச்செய்தி,

"ஊனிலுயிர்ப்பை யொடுக்கியொண்சுடர்

ஞானவிளக்கினையேற்றி நன்புலத்து ஏனைவழி திறந்தேத்துவார்கிட

ரான கெடுப்பன அஞ்செழுத்துமே” (3-22-3)

என வரும் ஆளுடையபிள்ளையார் திருப்பாடலால் அறியப்படும்.

'உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு முணர்நெய்யட்டி உயிரெனுந் திரிமயக்கி