பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


குருபரனாகி அருளிய பெருமையை”

எனவும்,

“புவளியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனெனயானுந்தேறினன் காண்க”

எனவும்,

“பாசமாம் பற்றறத்துப்பாரிக்கும் ஆரியனே.”

எனவும்,

“இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை யாண்டுகொண்டிங் கெழுந்தருளும் மதுவளர் பொழில் திருவுத்தரகோச மங்கையுள்ளாய் திருப்பெருந்துறைமன்னா”

(திருப்பள்ளியெழுச்சி)

எனவும்,

{{ tt g - * * לל முன்னே எனையாண்ட பார்ப்பானே

எனவும்,

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டுலகமெல்லாஞ் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேனம் கொட்டாமோ”

எனவும் வரும் திருவாசகச் செழும் பாடல்கள் திருவாதவூரடி களுக்கு இறைவனே குருவாக எழுந்தருளிவந்து மெய்யுணர்வளித்த திறத்தினை விரித்துரைப்பனவாகும். இங்ங்னம் சிவமே குருவாக எழுந்தருளும் திருவருளின் திறத்தை வியந்து போற்றுவது,

"அகாமா யாரும் அறிவரிதப்பொருள்

சகளமாய் வந்ததென்றுந்தீபற தானாகத் தந்ததென்றுந்தீபற’ (i)

எனவரும் திருவுந்தியாராகும். தோற்றமில் காலமாகத்