பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தெய்வத்திற்குப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டும் என விரும்புதல் இயல்பு. இவ்விருப்பத்தினை,

“அற்றமில்லாக்

கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்”

எனவருந்தொடரில் ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பிடுவர்.

தலைவனை மணந்து கொண்டு கற்புக்கடம் பூண்ட தலைமகள் தன் கனவற்குத் தொ(மகுலமாகிய தெய்வத்தின் பால் அச்சமுடைவாய் அன்பினாற் பணிந்தொழுகுதல் முறையாகும். இவ்வழிபாட்டு முறையினைத் தெய்வம் அஞ்சல்' என்னும் மெய்ப்பாடாக மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியனார் குறித்துள்ளார்.

தலைவன் தலைவியைப் பெற்றோரறியாதவாறு உடன்போக்கில் அழைத்துச் சென்றபோது தலைவியின் பிரிவால் வருந்திய செவிலித்தாய், தலைவனுடன் போகிய தலைமகட்கு வழியில் எத்தகைய தீங்கும் நேராதவாறு அருள்புரிதல் வேண்டும் எனத் தான் வழிபடு தெய்வத்தை இறைஞ்சிப் போற்றுதல் இயல்பு. இவ்வாறு செவிலித்தாய் தெய்வத் ை வழிபடுத்திறத்தினைத் தெய்வம் வாழ்த்தல்' (களவு - 25) என வருந்தொடரில் ஆசிரியர் குறித்துள்ளார். இங்கு எடுத்துக் காட்டிய குறிப்புக்களால் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையில் தெய்வ வழிபாட்டுணர்வு சிறப்பிடம் பெற்று விளங்கினமை நன்கு புலனாதல் காணலாம்.

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாட்டிற்கமைந்த சிறப்பும் இங்கு நினைக்கத்ததகுவதாகும். வேந்தனது வெற்றிக்கு அடையாளமாகிய கொடியானது ஏனை வேந்தர் கொடியினும் மேற்பட்டு விளங்குதலும் அரசன் பகைவரது அரனையழித்தலும் மன்னன் தன்னையடைந்தோர் அனைவர்க்கும் வரையாது வழங்குதலும் எனக் குற்றமற்ற சிறப்பினால் முற்படப் புகழ்தற்குரிய புறத்தினைத் துறைகள்